சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, விசிக தலைவர் திருமாவளவன் உட்பட அரசியல் கட்சித் தலைர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு உரையாற்றிய அவர், "இது அரசியல் படுகொலையா அல்லது வேறு ஒரு காரணமா என கேட்கபதற்கு முன்பாகவே, காவல்துறை அரசியல் படுகொலை இல்லை என கூறிவிட்டனர்.
தமிழக காவல்துறையில் சரியாக விசாரணை இருக்காது என்பதற்காகத்தான் தேசிய தலைவர் மாயவதி உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள். ஆனால், அரசு சிபிஐ விசாரணை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் சொல்லவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும்#ArmstrongDeath #BSP #RIPArmstrong pic.twitter.com/szpmd0DEpA
— M.Jagan Moorthy (@jaganmoorthy_m) July 6, 2024
பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, அரசு பதவி ஏற்றதிலிருந்து பல தலைவர்கள், மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் என பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த தலைவரை வெட்டி இருப்பது யாருடைய தூண்டுதல் என கேள்வி எழுகிறது.
படுகொலை செய்தவர்கள் யார்? ஆனால் சரணடைந்தவர்கள் யார்? இங்கு கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரசு ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கு எதிராக உள்ளதா என நினைக்க தோன்றுகிறது" என பேசினார்.
இதையும் படிங்க: "இன்னும் ஆயிரம் ஆம்ஸ்ட்ராங்கள் இருக்கிறார்கள்" - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை