பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளார் கே.ஈஸ்வரசாமி, அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை விட 2,52,042 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வ.எண் | கட்சி பெயர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
1. | திமுக வேட்பாளார் கே.ஈஸ்வரசாமி | 5,33,377 |
2. | அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் | 2,81,335 |
3. | பாஜக வேட்பாளர் வசந்தராஜன் | 2,23,354 |
4. | நாதக வேட்பாளர் சுரேஷ்குமார் | 58,196 |
2024 நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி, அதிமுக சார்பில் கார்த்திகேயன், பாஜக சார்பில் வசந்த ராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சுரேஷ்குமார் போட்டியிட்டனர். திமுகவின் சிட்டிங் எம்.பியாக உள்ள கே.சண்முகசுந்தரத்திற்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2019 தேர்தலில் வென்றது யார்?: கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.சண்முகசுந்தரம் 5 லட்சத்து 54 ஆயிரத்து 230 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மகேந்திரன், 3 லட்சத்து 78 ஆயிரத்து 347 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூகாம்பிகை 59 ஆயிரத்து 693 வாக்குகளையும். நாம் தமிழர் கட்சியின் சனுஜா 31 ஆயிரத்து 483 வாக்குகளையும் பெற்றனர்.
கடந்த தேர்தலில் 63.9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை சுமார் ஏழு சதவீத வாக்குகள் அதிகரித்து 70.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல் முடிவுகளின்படி, பொள்ளாச்சி அதிமுக வலுவாக உள்ள தொகுதியாக உள்ளது. அதிமுக இங்கு இதுவரை ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியை திமுக கைப்பற்றியது.