ETV Bharat / state

“டாஸ்மாக்கில் மது விலை உயர்வால் கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர்”.. பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு! - Pollachi Jayaraman

Pollachi Jayaraman: மதுபானங்களின் விலையை உயர்த்தி எளிய மக்கள் கள்ளச்சாராயத்தை நாடிச் செல்கின்ற நிலைமையை அரசு உருவாக்கி விட்டதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 8:16 PM IST

Pollachi Jayaraman
பொள்ளாச்சி ஜெயராமன் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் மது அருந்தியதில் இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் அவர்கள் கோவையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கள்ளச்சாராயம் எதுவும் அருந்தவில்லை என திருப்பூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், காந்திபுரம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேந்திரன் என்பவரை பொள்ளாச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொள்ளாச்சி ஜெயராமன், “நீண்ட நாட்களாக அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்திருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தும் அதனை தடுக்காமல் ஏன் விட்டுவிட்டார்கள்? மாவடப்பு என்பது ஆதிவாசி மக்கள் வசிக்கின்ற கிராமம். அங்கிருந்து சாராயம் கொண்டு வந்து குடித்ததன் மூலம் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதில் உடல்நிலை தேறிய நான்கு பேரை நாங்கள் பார்த்தோம், ஒருவர் கவலைக்கிடமான நிலமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது போன்று ஒரு வேதனையான சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று உள்ளதாக தெரிவித்த அவர், காவல்துறை உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்தார். இப்படி ஒரு சூழல் இருக்கும் பொழுது எப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்குவார்கள் என கேள்வி எழுப்பினார்.

உழைக்கும் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும், கஞ்சா, அபின், மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் இங்கு அதிகமாக புழங்குவதால் மக்கள் உயிருக்கு பாதுகாப்பாற்ற சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையெல்லாம் தடுத்து நிறுத்தினால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்க முடியும் என கூறினார்.

போதை சாம்ராஜ்யம் தமிழகத்தில் தலையெடுக்காமல் ஒடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். இவற்றையெல்லாம் முதலிலேயே சரி செய்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர், கண் கட்டிய பின்னால் சூரிய நமஸ்காரம் கூடாது என தெரிவித்தார். மேலும், ஏழை எளிய மக்களின் காதில் ஸ்டாலின் அரசு பூ சுற்றுவதாகவும் விமர்சித்தார்.

அரசு மதுபானங்களின் விலையை இந்த மூன்று ஆண்டுகளில் பன்மடங்கு உயர்த்தி உள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாகத்தான் மதுபானங்களை வாங்க முடியாதவர்கள் கள்ளச்சாராயத்தை நாடிச் செல்வதாக தெரிவித்தார். மேலும், மதுபான விற்பனை அனைத்தும் ஆளுங்கட்சிக்கு சார்ந்ததாக இருக்கிறது எனவும், மதுபான விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் என அனைவரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக விமர்சித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுவதாக சொன்னார்கள் என தெரிவித்த அவர், இன்றைய முதலமைச்சரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குடும்பத்துடன் கருப்புச் சட்டை அணிந்து முந்தைய ஆட்சி நடக்கும் பொழுது ஆர்ப்பாட்டத்தை எல்லாம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டினார்.

ஆனால், தற்பொழுது டாஸ்மாக் கடைகள் எல்லாம் திறந்து அவர்களது உறவினர்கள் தயாரிக்கின்ற மதுபானங்களின் விலையை உயர்த்தி எளிய மக்கள் கள்ளச்சாராயத்தை நாடிச் செல்கின்ற நிலைமையை உருவாக்கி விட்டதாக தெரிவித்தார். கள்ளுக் கடைகளை திறந்தால் விவசாயிகளுக்கு நன்மைதான் எனவும், அதனால் கள்ளச்சாராயம் இருக்காது எனவும் அது அரசினுடைய கொள்கை முடிவு என்றும் தெரிவித்தார். மேலும், தூய்மையான குடிநீரை மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: “டாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை அமைச்சரே கூறுகிறார்” - பிரேமலதா விஜயகாந்த் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.