ETV Bharat / state

காலி நிலத்தில் கிடந்த மண்டை ஓடு, எலும்புக்கூடுகள்.. தேனி அருகே பரபரப்பு! - Human Skull recovered in Theni - HUMAN SKULL RECOVERED IN THENI

Periyakulam Crime: தேனி மாவட்டம் மேல்மங்கலம் அருகே மண்டை ஓடு மற்றும் எலும்புக் கூடுகள் கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்ட இடம்
எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்ட இடம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 7:27 PM IST

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தில் இருந்து வைகை அணை செல்லும் சாலையில் விவசாயம் செய்யப்படாமல் உள்ள நிலத்தில் மண்டை ஓடு மற்றும் எலும்புக் கூடுகள் தனித்தனியே கிடப்பதாக ஜெயமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்தில் தனித்தனியே கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புக் கூடுகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் பெண் அணியும் உடை மற்றும் செருப்பு, பித்தளை செயின் ஆகியவை கிடைக்கப் பெற்றதால், மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு ஒரு பெண்ணின் உடல் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு மற்றும் ஜெயமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார், கிடைக்கப் பெற்ற மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டதா? அல்லது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவலைச் சேகரித்தும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க: பெங்களூரு ஏர்போர்ட்டில் தொழிலாளி கொடூர கொலை.. திருமணத்தை மீறிய உறவு காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.