ETV Bharat / state

போலீஸ் அதிகாரி மகனை போலீசார் தாக்கியதாக சர்ச்சை.. கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் நடப்பது என்ன? - Police officer son attack issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 3:36 PM IST

Police officer son attack: கரூரில் கோயில் திருவிழாவைக் காண வந்த காவல் உதவி ஆய்வாளரின் மகன் மற்றும் நண்பரை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தாக்கியதாகவும், சட்டவிரோதமாக காவலில் வைத்ததாகவும் பசுபதிபாளையம் காவல் நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பசுபதிபாளையம் காவல் நிலையம்
பசுபதிபாளையம் காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கரூர்: பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலய வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடும் நிகழ்வு நடைபெறுவதையொட்டி, கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சூர்யாவின் தங்கை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த, திருச்சி முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் லதாவின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது வாகனத்தை நிறுத்துவதில் இவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏர்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சூர்யா உட்பட அவரது நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளரின் மகன் மற்றும் நண்பரை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தாக்கியதாகவும், சட்டவிரோதமாக காவலில் வைத்ததாகவும், நேற்று (வியாழக்கிழமை) பசுபதிபாளையம் காவல் நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் திரண்டனர். இது குறித்து இளைஞர்களின் தங்கைகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கோயில் திருவிழாவில் வாகனத்தை நிறுத்தச் சென்ற நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் வேறு இடத்தில் வாகனத்தை நிறுத்துமாறு கூறினர்.

இதனால் வாகனத்தை வேறு இடத்தில் நிறுத்துவதற்குள் போலீசார் லத்தியால் எங்கள் அண்ணன்களை தாக்கினர். இதனால், இருவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் எங்கள் அண்ணன்களை பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் இருவரையும் லத்தியால் தாக்கினார்.

இது குறித்து தகவல் அறிந்து காவல் நிலையத்தில் தனது மகனை விடுவிக்க கோரி வந்த அம்மாவை (காவல் உதவி ஆய்வாளர் லதா) ஒருமையில் திட்டினர். மேலும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போலீசார் சட்டவிரோதமாக இரவு முழுவதும் அடைத்து வைத்து தாக்கியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை வாங்க மறுக்கின்றனர்.

காவல்துறை குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு காவல் நிலையத்தில் இந்த நிலைமை என்றால், சாதாரண பொதுமக்களுக்கு பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் எவ்வாறு நியாயம் கிடைக்கும்? தனது அண்ணன் சூர்யாவை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட காவலர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புகாரை வாங்க மறுத்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் எங்களது முடியை பிடித்து இழுத்ததுடன், ஒருமையில் தரக்குறைவாக பேசினார்” இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து பசுபதிபாளையம் காவல் நிலையம் வந்த கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், புகாரை பெற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். மேலும், காவல்துறையுடன் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோவை செய்தியாளர்களுக்கு காண்பித்து, காவல்துறையின் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை அதிகாரியைச் சந்தித்து முறையிடுவதற்காகச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பசுபதிபாளையம் காவல் துறை தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி கர்ப்பம்.. தந்தையின் இறுதிச் சடங்கின் போது பிறந்த குழந்தை.. விழுப்புரம் அருகே சோகம்! - Villupuram Death Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.