ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு ரவுடியைத் தேடும் போலீசார்.. யார் அவர்? - Armstrong murder case update - ARMSTRONG MURDER CASE UPDATE

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்தில் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Armstrong
சம்போ செந்தில் மற்றும் ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 4:37 PM IST

சென்னை: சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதில் முதற்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த 11 பேரில் திருவேங்கடத்தை பதுக்கி வைத்த ஆயுதங்களை எடுப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வழக்கறிஞர் மலர்கொடி வங்கிக் கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் உதவியதாக மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

மேலும், பாஜக மகளிர் அணி நிர்வாகி அஞ்சலையைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில்,
நேற்று கைது செய்யப்பட்ட ஹரிஹரன் கொடுத்த தகவலின் பேரில், சம்போ செந்திலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். செந்தில் கொடுத்த பணத்தில் ஹரிஹரன் மூலமாக 4 லட்சம் பணம் அருளுக்கு கைமாறியுள்ளதாகவும், மேலும் அந்தப் பணம் மலர் கொடி உள்ளிட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதானவர்களிடம் இருந்து 3 கார்கள் பறிமுதல்.. அதிமுகவில் இருந்து மலர்கொடி நீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.