ETV Bharat / state

"செய்வோம்.. செய்வோம் என ஏமாற்றியது போதும்" - தமிழக அரசுக்கு டிட்டோஜாக் அமைப்பு எச்சரிக்கை - Teachers Protest - TEACHERS PROTEST

Dittojak Federation Protest: சென்னையில் நடக்கும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக கோவில்பட்டியில் இருந்து கிளம்பிய டிட்டோஜாக் அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டிட்டோஜாக் அமைப்பினர் போராட்டம்
டிட்டோஜாக் அமைப்பினர் போராட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 2:36 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் சார்பில் தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வியை பாதுகாக்க 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ (DPI) வளாகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிட்டோஜாக் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இருப்பினும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பேருந்துகளில் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், போராட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு (டிட்டோஜாக்) சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர். அப்போது தீயணைப்பு நிலையம் அருகே பேருந்தை வழிமறித்து போலீசார் சென்னை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பேருந்தைவிட்டு இறங்கிய 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சாலையோரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நம்பிக்கை வார்த்தை மட்டுமே கிடைக்கிறது: இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிட்டோஜாக் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, "தேர்தலில் வெற்றி பெற்று வந்தவுடன் ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றுவதாக தற்போதைய திமுக அரசு அறிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்த ஓராண்டு ஆகிய பின்பும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று காத்திருந்தோம். ஆனால், முதலமைச்சரை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்கிறோம் எனக் கூறினார்கள்.

அதற்கு நாங்கள் நம்பிக்கை மாநாட்டை நடத்தினோம். அதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். தற்போது அந்த மாநாட்டால் எந்தவொரு பயனும் இல்லை. கடந்த மூன்றரை ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கை வார்த்தைகளை மட்டுமே தெரிவித்துச் செல்கிறார். தற்போது வரை "செய்வோம்.. செய்வோம்" என்று ஏமாற்றி நான்காம் ஆண்டில் வந்து நிற்கிறோம்.

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது?: அரசுக்கு எதிரான மனநிலையில் தான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளார்கள். எனவே எங்களது கோரிக்கையை முதலமைச்சர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அனைவருமே கைதாகுவதற்கு தயாராக இருக்கிறோம். எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேறாத பட்சத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டம் மாநில பொதுக்குழு கூட்டி முடிவு செய்து அறிவிக்கும். பதவி உயர்வு இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. 5,000 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 5,000 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை எப்போது நிரப்புவார்கள் என்று தெரியவில்லை.

இவ்வளவு நம்பிக்கை மோசடியாக இந்த அரசாங்கம் செயல்பட்டால் நிச்சயமாக வரும் காலங்களில் அரசுக்கு எதிராகத்தான் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்கு இருக்கும். ஏற்கனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையால் ஒவ்வொரு தேர்தலிலும் 90% வாக்குகள் விழும். ஆனால் கடந்த தேர்தலில் 50 சதவீதத்தைவிட குறைந்துவிட்டது. ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றபடாவிட்டால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அரசுக்கு எதிராகத்தான் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகள் இருக்கும்" என்று ராமமூர்த்தி கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சட்டப்பேரவைக்குள் குட்கா விவகாரம்: திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லும் - ஐகோர்ட் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.