ETV Bharat / state

சதுரங்க வேட்டை பாணியில் தேனியில் சம்பவம்.. ரூ.3.40 கோடி போலி நோட்டுகள் பறிமுதல்! - Theni Money fraud issue

Theni Money fraud issue: தேனியில் தன்னிடம் பணம் கொடுத்தால் இரு மடங்காக தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் போலி பணம்
கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் போலி பணம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 7:42 PM IST

Updated : Aug 15, 2024, 8:10 PM IST

தேனி: சதுரங்க வேட்டை பட பானியில், பணம் கொடுத்தால் அதை இரு மடங்காக திருப்பி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.3 கோடியே 40 லட்சம் போலி 2,000 ரூபாய் நோட்டுகள், ரூ.14 லட்சம் பணம் மற்றும் 16 செல்போன், 3 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை ஆவடியைச் சேர்ந்த தவச்செல்வன் தன்னிடம், ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் அதற்கு இரு மடங்காக பணம் தருவதாக கூறி தான் ஏமாற்றப்பட்டதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாதத்திடம் புகார் மனுவை அளித்துள்ளார்.

இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தேனி துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில், ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், கருவேல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சேகர் பாபு மற்றும் பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கேசவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களது காரை பரிசோதனை செய்ததில், ரூ.3 கோடியே 40 லட்சம் போலி 2,000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தேனி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சென்னை ஆவடியைச் சேர்ந்த தவச்செல்வன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி, தற்போது இருவரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் அதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும்.

புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் அதனை இரண்டு மடங்காக, 2000 ரூபாய் நோட்டுக்களாக கொடுப்பதாகவும் கூறி ஏமாற்றியுள்ளனர். மேலும், ரிசர்வ் வங்கியால் தற்போது ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், தவச்செல்வத்திடம் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் அதனை இரண்டு மடங்காக, 2,000 ரூபாய் நோட்டுகளாக திருப்பிக் கொடுப்பதாக கூறி ஏமாற்றியுள்ளனர். இதற்காக தவச்செல்வத்திடம் காரில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் இருக்கக்கூடிய புகைப்படத்தை அனுப்பி, அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பெற்றுள்ளனர். மேலும், அவரிடமிருந்து கைபேசியையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து அளித்த புகாரின் பேரில், தற்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ. 3 கோடியே 40 லட்சம் போலி 2,000 ரூபாய் நோட்டுகள், ரூ.14 லட்சம் பணம், 16 செல்போன்கள் மற்றும் 3 கார்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இவர்கள் இதுவரையில் எத்தனை நபர்களை ஏமாற்றி எவ்வளவு பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர், இந்த மோசடியில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்ற கோணங்களின் அடிப்படையில், விசாரணை செய்து வருகின்றனர்” இவ்வாரு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

Last Updated : Aug 15, 2024, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.