ETV Bharat / state

உதவி செய்வது போல் நாடகமாடி சிறுமியை கடத்திய இளைஞர் - போலீசில் சிக்கியது எப்படி? - Mayiladuthurai kidnapping case - MAYILADUTHURAI KIDNAPPING CASE

Mayiladuthurai Girl kidnapping case: பார்வை தெரியாமல் தெருவில் யாசகம் பெறும் நபரிடம் உணவு வாங்கித் தருவதாக ஏமாற்றி, அவருடன் இருந்த சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை, பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியை கடத்தும் சிசிடிவி மற்றும் கடத்திய இளைஞர் புகைப்படம்
சிறுமியை கடத்தும் சிசிடிவி மற்றும் கடத்திய இளைஞர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 2:09 PM IST

மயிலாடுதுறை: விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பள்ளிக் கூட தெருவைச் சேர்ந்தவர் மாயவன்(40), பார்வையற்ற இவர் ஊர் ஊராகச் சென்று பாட்டுப்பாடி யாசகம் பெற்று வருகிறார். அந்த வகையில், மாயவன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்துள்ளார்.

மேலும், அவரால் பார்க்க முடியாது என்பதற்காக 11 மற்றும் 12 வயதுடைய அவரது தங்கை மகள்களை, உதவிக்காக அழைத்துச் சென்றுள்ளார். அதனையடுத்து மாயவன் மணிக்கூண்டு பகுதியில் ஒரு சிறுமியை மட்டும் அழைத்துச் சென்று யாசகம் பெற்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ஒருவர் மாயவனை அழைத்து சாப்பாடு வாங்கித் தருவதாகக் கூறி, அவரை ஒரு கடையின் அருகே அமர வைத்துவிட்டு, உணவு வாங்க செல்லலாம் எனக் கூறி சிறுமியை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இளைஞர் சிறுமியை கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சி (Credits - ETV Bharat Tamilnadu)

ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுமி வராத காரணத்தால் அச்சமடைந்த மாயவன், அப்பகுதியிலிருந்த பொதுமக்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக சீர்காழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி, விரைந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, அதன் மூலம் சிறுமியைக் கடத்திச் சென்ற நபரைத் தேடி வந்தனர்.

இதற்கிடையே, சீர்காழி தோப்பு பள்ளி அருகே இளைஞர் ஒருவருடன், சிறுமி ஒருவர் அழுதவாறு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், சிறுமியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், சிறுமியை கடத்திச் சென்ற நபர் சீர்காழி அடுத்த கோயில் பத்து பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்(32) என்பது தெரிய வந்துள்ளது.

அதையடுத்து, ரஞ்சித்தை கைது செய்த சீர்காழி போலீசார், அவர் மீது 366(A) ஆசை வார்த்தை கூறி குழந்தையை கடத்தல் வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, சிறுமி மாயவனிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தற்போது சீர்காழியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்வது போல் நாடகமாடி சிறுமியை கடத்திச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னை சென்ட்ரலில் பயணியின் கைப்பையை நைசாக லவட்டி சென்ற நபர்... போலீசில் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.