ETV Bharat / state

மதுவுக்கு அடிமையான மகன் கொலை.. தூத்துக்குடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது..!

மதுபோதைக்கு அடிமையான மகனை உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட  தந்தை மகேஷ், கோதரர்கள் அரவிந்த், உறவினர் பாலகிருஷ்ணன்
கைது செய்யப்பட்ட தந்தை மகேஷ், கோதரர்கள் அரவிந்த், உறவினர் பாலகிருஷ்ணன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 11:40 AM IST

தூத்துக்குடி: மதுபோதைக்கு அடிமையான மகனை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்ற போது ஏற்பட்ட தகராற்றில், ஆத்திரத்தில் மகனை கொலை செய்து எரித்த சம்பவம் தொடர்பாக தந்தை, சகோதரர்கள் உட்பட 4 பேரை தூத்தூக்குடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள குமாரகிரி கிராம காட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக, அவ்வழியாகச் சென்றவர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், டி.எஸ்.பி. அசோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், உயிரிழந்த நிலையில் இளைஞரின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல் ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் மாதவராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்துள்ளனர். இதில், ஒரு கார் எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி சாலையில் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் எட்டயபுரம் நோக்கி திரும்பியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதில், சந்தேகமடைந்த போலீசார் அந்த காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். இதில், எரித்துக் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த செல்வகுமார்(22) என்பது தெரிய வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இக்கொலைச் சம்பவம் தொடர்பாக செல்வகுமாரின் தந்தை மகேஷ் (47), சகோதரர்கள் அரவிந்த் (24) மற்றும் 18 வயதான தம்பி, உறவினர் பாலகிருஷ்ணன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கேரளாவில் ரயில் விபத்து..! தமிழக தொழிலாளர்கள் 4 பேர் மரணம்

இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் கூறுகையில், "கோவில்பட்டி அருகிலுள்ள கிழவிபட்டியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் வேலை நிமித்தமாக தூத்துக்குடி ராமதாஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 3 மகன்களில் செல்வகுமார் மதுபோதைக்கு அடிமையாகி அடிக்கடி தகராற்றில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், செல்வகுமாரை மதுரையில் உள்ள போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பதற்காக காரில் அழைத்துச் சென்றுள்ளனர். காரை மகேஷின் உறவினர் பாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்றுள்ளார். இதில், செல்வகுமார் மறுவாழ்வு மையத்திற்கு வர மறுத்து தந்தை மற்றும் சகோதரர்களிடம் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த மகேஷ் உள்ளிட்டோர் செல்வக்குமாரை கொலை செய்துள்ளனர்.

தொடர்ந்து, செல்வக்குமார் உடலை கோவில்பட்டி குமாரகிரி கிராம காட்டுப் பகுதிக்கு கொண்டு வந்து எரித்தது தெரியவந்தது. விசாரணையில் 4 பேரும் செல்வகுமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து மகேஷ், அவரது மகன்கள் அரவிந்த், மற்றும் 18 வயது சிறுவன் மற்றும் உறவினர் பாலகிருஷ்ணன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.