ETV Bharat / state

சிக்கிய சம்போ செந்தில் புதிய புகைப்படங்கள்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த நகர்வு! - armstrong murder case

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படம் போலீசாரிடம் சிக்கியுள்ளதால், தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சம்போ செந்தில்
சம்போ செந்தில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 5:23 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன் உட்பட இதுவரை 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தொலைபேசி அழைப்புகளை வைத்து இதுவரை 200 பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக தேடியும் இன்னும் சிக்காமல் உள்ளனர்.

இதனிடையே, சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மொட்டை கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர். அவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பண உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மொட்டை கிருஷ்ணனுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இந்த மொட்டை கிருஷ்ணனுடன் தொலைபேசியில் பேசியுள்ளதன் காரணமாக தான் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மற்றும் நெல்சனிடம் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மொட்டை கிருஷ்ணனுடன் சம்போ செந்தில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்தையடுத்து, போலீசார் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் மேலாளரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கடந்த 2020ஆம் ஆண்டு வரை இவரிடம் சம்போ செந்தில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவியிடம் இருந்து சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படத்தை போலீசார் பெற்றுள்ளனர். சிக்காமல் இருப்பதற்காக VPN தொழில்நுட்பம் மூலமாக பேசிவருவதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தை வைத்து தனிப்படை போலீசார் சாம்போ செந்திலை தேடி வந்தநிலையில் தற்போது போலீசாருக்கு புதிய புகைப்படம் கிடைத்துள்ளது சம்போ செந்திலைப் பிடிப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: இயக்குநர் நெல்சன் வீட்டுக்கு விரைந்த தனிப்படை போலீஸ்; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.