ETV Bharat / state

கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் ஓனர் தற்கொலை; கந்துவட்டி கும்பலை கைது செய்ய கோட்டாட்சியரிடம் மனு - kandhu vatti act

Real Estate Owner Commits Suicide in Kovilpatti: கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் ஓனர் தற்கொலைக்குக் காரணமான கந்துவட்டி கும்பலைக் கைது செய்யக் கோரி கோட்டாட்சியரிடம் உறவினர்கள் மனு வழங்கினர்.

Real Estate Owner Commits Suicide In Kovilpatti
கந்துவட்டிக் கொடுமையால் ரியல் எஸ்டேட் ஓனர் தற்கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 10:21 AM IST

கந்துவட்டி கும்பலை கைது செய்ய கோட்டாட்சியரிடம் மனு

தூத்துக்குடி: கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டி(45). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் இவர், சில நபர்களிடம் கந்து வட்டிக்குப் பணம் கடனாகப் பெற்று மாதம் மாதம் வட்டி செலுத்தி வந்துள்ளார். அது மட்டுமின்றி, நிலம் தொடர்பாக கொடுத்த பைனான்ஸ் தொகையும் வராமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் ஆறுமுகப்பாண்டி கொடுத்த இடங்களில் பணம் வரவில்லை என்பதால் வட்டி கொடுக்க முடியாமல் பரிதவித்துள்ளார்.

மேலும், தான் வாங்கிய அசல் பணத்திற்கு மேலாக வட்டி கொடுத்து இருந்த போதிலும் வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். தனக்குக் காலஅவகாசம் கொடுங்கள் பணத்தினை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று ஆறுமுகப்பாண்டி எவ்வளவு சொல்லியும் கேட்காத கந்து வட்டிக் கும்பல் அவரையும், அவரது குடும்பத்தினரையும் தொந்தரவு செய்து வந்ததாக தெரியவருகிறது. இதனால், கந்து வட்டி பிரச்னை தொடர்பாக கடந்த 28.08.23 மற்றும் 25.01.2024 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஆறுமுகப்பாண்டி புகாரளித்துள்ளார்.

ஆனால், காவல் துறையினர் கந்துவட்டி கும்பல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கட்ட பஞ்சாயத்துப் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் கந்து வட்டிக் கும்பலின் தொல்லை தாங்க முடியாமல் ஆறுமுகப்பாண்டி கடந்த 25ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றநிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குச் சிகிச்சைப் பலனின்றி கடந்த 27 ஆம் தேதி ஆறுமுகப்பாண்டி உயிரிழந்தார்.

காவல் துறையின் அலட்சியப் போக்கு காரணமாகவும், கந்துவட்டி கேட்டு கும்பல் மிரட்டியதால் தான், ஆறுமுகப்பாண்டி தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறி, கந்துவட்டி கேட்டு மிரட்டியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், அவர்களிடம் உள்ள ஆவணங்களை மீட்டுத் தர வலியுறுத்தியும் ஆறுமுகப்பாண்டியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவரின் உயிரிழப்புக்கு காரணமான கந்துவட்டு கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரிடம் கைப்பற்றிய ஆவணங்களை மீட்டுத்தர கோரியும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், நேற்று முன்தினம்(ஜன.28) கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமும் கோரிக்கை விடுத்தனர். கந்துவட்டி கேட்டு மிரட்டியவர்களைக் கைது செய்யும் வரை ஆறுமுகப்பாண்டியின் உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று ஆறுமுகப்பாண்டியின் மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு, ஆறுமுகப்பாண்டியின் தற்கொலைக்குக் காரணமான கந்து வட்டிக்காரர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும், அவரிடம் வாங்கிய ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாயிடம் கோரிக்கை மனு வழங்கினர். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் டிஎஸ்பியைச் சந்தித்துப் பேசும்படி தெரிவித்தார்.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி வெங்கடேஷ் நேரில் சந்தித்துப் பேசினார். இதில் சட்டத்துக்கு உட்பட்டு எந்தெந்த ஆவணங்களை பெற்றுதர முடியுமோ, அதனைக் கண்டிப்பாக வாங்கித்தருவோம். மேலும், ஆறுமுகப்பாண்டி குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி உறுதி அளித்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ஆறுமுகப்பாண்டியின் உடலைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: பிப்ரவரி 1 முதல் மதுபானங்கள் விலை உயர்வு - டாஸ்மாக் அதிரடி அறிவிப்பு! - மது பிரியர்கள் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.