சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மணிவண்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் மட்டும் ஆண்கள் மற்றும் பெண்கள் என 7 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக” மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 சதவீத இட ஒதுக்கீடு அளித்துள்ள போதும், அவை முழுமையாக கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார். இதற்காக கடந்த ஜனவரி மாதம் மனு அளித்ததாகவும், அதற்கு தேர்தல் ஆணையம், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என பதிலளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரிய வழக்கு; மார்ச் 28-ல் உத்தரவு! - Senthil Balaji Case