ETV Bharat / state

ஜாபர் சாதிக் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு! - Jaffer Sadiq drug Smuggling case

Jaffer Sadiq drug Smuggling case: ஜாபர் சாதிக் வீட்டை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்ததை அகற்றக் கோரி, ஜாபர் சாதிக் தரப்பு வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Jaffer Sadiq drug trafficking case
Jaffer Sadiq drug trafficking case
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 8:09 AM IST

சென்னை: டெல்லியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் திமுக நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் பத்து நாட்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு, அவரை சென்னை அழைத்து வந்து அயப்பாக்கத்தில் உள்ள என்சிபி (NCB) அலுவகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஜாபர் சாதிக் மீதான போலீஸ் காவல் முடிந்தநிலையில், அவரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனி விமானம் மூலம் அதிகரிகள் அவரை டெல்லி அழைத்துச் சென்றனர்.

அப்போது, ஜாபர் சாதிக்கை மேலும் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் 29ஆம் தேதி, சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து, சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி, அவரது வீட்டிற்கு சீல் வைத்து விட்டுச் சென்றனர். அப்போது, ஜாபர் சாதிக்கின் தயார், அதிகாரிகள் வீட்டில் ஒட்டிய நோட்டீஸை கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு வைக்கப்பட்ட சிலை அகற்றக்கோரி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "இந்த வழக்கிற்கும் ஜாபர் சாதிக்கின் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவர்கள் தொடர்ச்சியாக வெளியே தங்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக அந்த சீலை அகற்ற உத்தரவிட வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.