ETV Bharat / state

பிரான்ஸ் மக்களவைத் தேர்தல்; புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தீவிரம்! - French parliamentary elections

French Parliamentary elections: பிரான்ஸ் நாட்டு மக்களவைத் தேர்தலுக்காக நடைபெற்ற 2-ம் கட்ட வாக்குப்பதிவில் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஏராளமானோர் வாக்களித்தனர்.

தேர்தலில் வாக்களித்தவர்களின் புகைப்படம்
தேர்தலில் வாக்களித்தவர்களின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 4:25 PM IST

புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டு ஐரோப்பிய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதுச்சேரியில் கடந்த மாதம் நடைபெற்றது. புதுச்சேரி, காரைக்கால், சென்னை, கேரள பகுதிகளிலும் அதற்கான வாக்குப்பதிவு பிரான்ஸ் நாட்டுத் தூதரகம் சார்பில் நடத்தப்பட்டது. அதன்படி, பிரான்ஸில் ஜோர்டான்பார்டிலா கட்சியானது 31.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதையடுத்து அக்கட்சிக்கு 30 உறுப்பினர்கள் தேர்வாகினர். அக்கட்சிக்கு அடுத்ததாக பிரான்ஸின் தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்சியானது 13.83 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அக்கட்சிக்கு 13 உறுப்பினர்கள் தேர்வாகினர்.

இமானுவேல் மேக்ரான் கட்சியின் உறுப்பினர் குறைவாக தேர்வான நிலையில், பிரான்ஸ் ஐரோப்பிய மக்களவை கலைக்கப்பட்டது. அதையடுத்து, அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, முற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஜூன் 30ம் தேதி நடைபெற்றது. புதுச்சேரியில் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற 4,550 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்தில் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் தங்களது அடையாள அட்டையைக் காட்டி வாக்குகளைச் செலுத்தினர்.

இந்நிலையில், 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரையில் நடைபெற உள்ளது. காரைக்கால், சென்னை ஆகிய இடங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குரிமை உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தங்களின் வாக்கை ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காங்கிரசில் இணையும் பிஆர்எஸ் எம்எல்ஏக்கள்? சந்திரசேகர ராவ் கட்சியில் என்ன நடக்கிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.