ETV Bharat / state

மின்கம்பங்களில் மின்சாரம் கட்.. தீப்பந்தம் ஏந்தி போராடிய வள்ளலாகரம் ஊராட்சி மக்கள்! - street light issue - STREET LIGHT ISSUE

People Protest Against Street Light Issue: மயிலாடுதுறை அருகே உள்ள லட்சுமி புரத்தில் 17 மின்கம்பங்களின் மின் இணைப்பைத் துண்டித்து, குடியிருப்புப் பகுதிகளை இருளாக்கிய மின்சாரத்துறையைக் கண்டித்து பொதுமக்கள் தீப்பந்தங்களை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

People Protest Against Street Light Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 6:49 PM IST

Updated : Apr 28, 2024, 11:06 PM IST

மின்கம்பங்களில் மின்சாரம் கட்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், வள்ளலாகரம் ஊராட்சி, லட்சுமி புரத்தில் விவேகானந்தர் தெரு, ரஃபிக் நகர், வில்வம் நகர், ஆர்.எஸ்.எஸ் பிரிமியர் கார்டன், பாரதியார் தெரு ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பொதுமக்கள் பங்களிப்பு நிதியில் ஊராட்சி சார்பாக, 17 மின்கம்பங்களுக்கு நேரிடையாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு, அப்பகுதியில் ஆய்வு செய்த மின்சாரத் துறையினர், நேரிடையாக தெருவிளக்குகளுக்குக் கொடுக்கப்பட்ட மின் இணைப்புகளைத் துண்டித்துள்ளனர். இதனால் மின்சாரம் இல்லாமல் தெருக்கள் இருளில் மூழ்கின. இதன் காரணமாக, இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்கள் குடியிருப்பதற்குத் தேவையான மின்சாரம், குடிநீர், சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், மின் கம்பங்களின் இணைப்பைத் துண்டித்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இருளில் மூழ்கடித்த மின்சாரத் துறையைக் கண்டித்தும், குடியிருப்புப் பகுதிகளுக்கு உரிய முறையில் மின்சாரம் வழங்காத ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், அப்பகுதி மக்கள் கையில் தீப்பந்தங்களை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட மின்கம்பங்களில் தீப்பந்தங்களைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய அப்பகுதி மக்கள், உடனடியாக சாலையில் உள்ள மின் கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவர் கூறுகையில், “மின்கம்பங்களுக்கு மின் இணைப்புகள் உடனடியாக வழங்காவிட்டால், நாங்கள் சாலை மறியல் போராட்டம் அல்லது உண்ணாவிரதம் இருக்கலாம் என முடிவு செய்துள்ளோம். தமிழக அரசு இதற்குத் தீர்வு காண வேண்டும்" என்று கூறினார்.

இதுதொடர்பாக மின்வாரிய உதவிப் பொறியாளர் கூறுகையில், "மேற்கண்ட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குடியிருப்புகளுக்காக மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கான இணைப்பிலேயே தெரு விளக்கை அமைத்துள்ளனர்.

இது சட்ட விரோதமானது. 24 மணி நேரமும் மின்விளக்கு எரியும் என்பதால், ஆபத்தான நிலையும் உள்ளது. எனவே, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக மேற்கண்ட பகுதிகளுக்கு தெருவிளக்கு அமைக்க மனு அளித்தால், உடனடியாக தெருவிளக்கு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரீ ரிலீஸ் படங்களால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பா? கேபிள் சங்கர் பிரத்யேக பேட்டி! - Re Release Flims

Last Updated : Apr 28, 2024, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.