ETV Bharat / state

இடிந்து விழும் நிலையில் நீர்தேக்கத் தொட்டி! திக் திக் என வாழும் கிராம மக்கள்! அரசு நடவடிக்கை எடுக்குமா?

Water Tank Issue: கும்பகோணம் ஊராட்சி ஒன்றியதுக்கு உட்பட்ட ஏராகரம் ஊராட்சியில் குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் நீர்தேக்கத் தொட்டியில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை அருகே நீர்தேக்கத் தொட்டி சேதம்
தஞ்சை அருகே நீர்தேக்கத் தொட்டி சேதம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 7:21 PM IST

தஞ்சை அருகே நீர்தேக்கத் தொட்டி சேதம்

தஞ்சாவூர்: கும்பகோணம் ஊராட்சி ஒன்றியதுக்கு உட்பட்டது ஏராகரம் ஊராட்சி. இதன் தலைவராக வரலட்சுமி ரமேஷ் (திமுக) இருந்து வருகிறார். இந்த ஊராட்சிக்குட்பட்ட 8 மற்றும் 9வது வட்டங்களில் உள்ள பட்டக்கால் தெரு, நடுத்தெரு, தங்கையா நகர், மேட்டுத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களை சேர்த்து மொத்தம் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்புகளுக்கு 8வது வட்ட பட்டக்கால் தெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. அரசு விதிமுறைகளின் படி, ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள குடிநீர் தொட்டியில் மாதம் ஒரு நாள் தூய்மைப்பணி நடைபெற வேண்டும். மேலும் தூய்மைப் பணிக்குப் பிறகு மீண்டும் தூய்மை செய்ய வேண்டிய தேதியும் அந்த தொட்டியிலேயே குறிப்பிடப்படுவது வழக்கம்.

ஆனால் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த குடிநீர்த் தொட்டி சீரமைக்கப்பட்டதற்குப் பிறகு, இதுவரை சுத்தம் செய்யப்படவே இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தொட்டிக்குரிய தூண்களில் ஒன்று, கடந்த 2 ஆண்டுகளாக பலமாக சிதலமடைந்து பலமற்று நிலையில் உள்ளது.

மேலும் இந்தத் தொட்டி அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகேயே அசூர் புறவழிச்சாலை அமைந்துள்ளது. நாள்தோறும் எண்ணற்ற கனரக வாகங்கள் இந்தப் பகுதியைக் கடந்துச் செல்வதனால் ஏற்படும் அதிர்ச்சியில், இந்த கான்கிரீட் தூண் எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் நிறைந்து காணப்படுகிறது.

இது மட்டுமின்றி, இந்தத் தொட்டியைச் சுற்றி குடியிருப்புகள் நிறைந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். மேலும், இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க 8வது வட்ட ஊராட்சி மன்ற உறுப்பினரான செல்வி மற்றும் 8 மற்றும் 9வது வட்ட பொது மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் வரலட்சுமி ரமேஷிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டும் பயனில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து, மக்களின் மனுக்கள் எங்கே போகிறது என்று தெரியவில்லை. நீர்தேக்கத் தொட்டியை சீரமைப்பதற்கான எந்தொரு நடவடிக்கையும் இதுவரை நகராட்சி அலுவலர்கள் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து பெரிய அளவில் அடை அடையாக பாசிப்படிந்துள்ளதால், பல குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் போவது தடைப்பட்டு அவர்கள் குடிநீருக்கு அல்லல் படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்னர் ஏராகரம் ஊராட்சி நிர்வாகமும், ஊரக வளர்ச்சித்துறையும், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்..அதிகாரிகளுக்கு சேலம் ஆட்சியர் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.