ETV Bharat / state

"ரயில் விபத்தின் போது பாத்ரூமில் சிக்கினேன்" பகீர் தருணங்களை பகிர்ந்த இளைஞர்

"ரயில் விபத்தின் போது பாத்ரூமில் சிக்கிக் கொண்டேன், கதவை உடைத்து என்னை காப்பாற்றினார்கள்" என பாக்மதி எக்ஸ்பிரஸில் பயணம் மேற்கொண்ட உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

ரயில் விபத்து மற்றும் பேட்டியளித்த பயணிகள்
ரயில் விபத்து மற்றும் பேட்டியளித்த பயணிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்துள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் பொன்னேரி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன் குமார் (25) என்பவருக்கு வலது காலில் காயம் இருப்பதால் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. அதே போல் உத்திரபிரதேசத்தை பிரியான்சோ( 25) இடது கண்ணில் மேல் பகுதியில் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 22 வயதான ராகுல் குமார் என்பவருக்கு இடது காலில் எலும்பு முறிவு காரணமாக கட்டு போடப்பட்டுள்ளது என மருத்துமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாத்ரூமில் சிக்கிக் கொண்டேன்: இந்த விபத்து குறித்து ரயிலில் பயணம் மேற்கொண்ட ரோசன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,"பெங்களுரில் இருந்து உத்திர பிரதேசம் போக அந்த ரயிலில் பயணித்தேன். நான் பாத்ரூமில் இருந்தேன் பிரியான்சோ கை கழுவ ரயில் கதவிடம் சென்றார் அப்போது தான் விபத்து நடந்தது.

இதனையடுத்து ரயிலிலிருந்த அனைத்து மக்களும் ரயிலில் வெளியேறி ஓடிக்கொண்டிருந்தனர். நான் அப்போது பாத்ரூமில் சிக்கிக் கொண்டேன். உடனே பாத்ரூம் கதவை உடைத்து என்னை வெளியேற்றினர். அப்போது என்னுடன் வந்தவர் அங்கு இல்லை. அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று விட்டனர். மேலும் விபத்து நடந்த உடனேயே காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். எனக்கு காயம் ஏற்படவில்லை என் உறவினருக்கு தலையில் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:6 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பதட்டம் ஏற்பட்டு விட்டது: இது குறித்து ரயில் விபத்தில் படுகாயமடைந்த பிராயான்சோ என்பவரின் உறவினர் சர்வன் குமார், நம்மிடையே பேசுகையில், "நான் பெங்களூரில் வசிக்கிறேன். நேற்றைய தினம் என் மகனையும், என் உறவினர் மகனையும் ரயிலில் ஏற்றிவிட்டு சென்றுவிட்டேன். மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு தொடர்பு கொண்டேன் அவர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.

மீண்டும் சிறிது நேரத்தில் எனக்கு அவர்கள் தொடர்பு கொண்டு ரயில் தடம் புரண்டுவிட்டது" என கூறினார்கள். உடனே எனக்கு பதட்டம் ஏற்பட்டு விட்டது என என்னுடைய மகன் கூறினார். மேலும் தனக்கு ஒன்றும் ஆகவில்லை ஆனால் உறவினர் மகன் பிரியான்சோவிற்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அவன் இங்கு இல்லை என கூறினார். பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என தெரிந்தது. இந்த செய்தி கேள்விப்பட்ட உடனே நான் மருத்துவமனை வந்துவிட்டேன். இங்கு வந்து பார்த்தால் என் உறவினர் மகன் மிகவும் படுகாயமடைந்துள்ளார்.

மருத்துவர்கள் 3 நாட்கள் பிறகு அவர் உடல்நிலை குறித்து தகவல் தருவதாகக் கூறியுள்ளனர். இந்த செய்தி கேள்விப்பட்ட உடனே மிகவும் பதட்டம் அடைந்தேன். மேலும் ரயிலிலிருந்த என் மகனும் ரயில் தடம் புரண்ட நேரத்தில் பாத்ரூமில் இருந்ததாகவும், கதவு உடைத்து அவரை காப்பாற்றியதாக என்னிடம் தெரிவித்தார். உடனே நானும் இங்கு புறப்பட்டு வந்து விட்டேன்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத்
ஈடிவி பாரத் (Credits - ETV Bharat)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.