ETV Bharat / state

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்! - Panguni Brahmotsavam Flag Hoisting

Jambukeswarar Akilandeswari Temple: திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா இன்று (மார்ச் 17) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 3:37 PM IST

திருச்சி: பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா‌ இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தையொட்டி முன்னதாக சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 8.30 மணிக்குக் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். அங்கு, கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 9.25 மணிக்குள் மேஷ லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி 8 திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை 9 மணிமுதல் 9.40 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, இரவு சோமாஸ்கந்தர் புறப்பாடு நடைபெறும். 2‌ஆம் நாள், சுவாமி சூரிய பிரபை வாகனத்திலும், அம்மன் சந்திரப் பிரபை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். தொடர்ந்து, 3‌ ஆம் நாள் சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும், 4‌ ஆம் நாள் சுவாமி கைலாச வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், 5‌ ஆம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற உள்ளது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம், ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பங்குனி தேர்த்திருவிழா ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனைத் தொடர்ந்து சொக்கர் உற்சவம், மௌனோத்ஸவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதில், சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5 ஆம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். இதனையடுத்து, ஏப்ரல் 24 ஆம் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

இதையும் படிங்க: "விழுப்புரத்தில் மீண்டும் நான்தான் போட்டியிடுகிறேன்" - விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.