ETV Bharat / state

முதுகலை படிக்கும் மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் ஓராண்டு பயிற்சி முடித்தால் போதும்!

அரசு பணியில் இல்லாமல் முதுகலை மருத்துவம் படித்தவர்களை ஓராண்டு பயிற்சி முடிந்தால் விடுவிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு இயக்குநர் செல்வவிநாயகம்
பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு இயக்குநர் செல்வவிநாயகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சென்னை: மருத்துவம் சார்ந்த முதுகலைப் பட்டப்படிப்புகளில் அரசு மருத்துவராக இல்லாமல் நேரடியாக 2023-ஆம் ஆண்டில் படிப்பில் சேர்ந்தவர்கள் ஒராண்டு பாண்டு காலத்தை முடித்ததற்கான சான்றிதழ் உடன் விண்ணப்பம் செய்தால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் அரசு சாரா மருத்துவர்களாக பயிற்சி மேற்கொள்ளும் மருத்துவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் ஒராண்டாக குறைத்ததற்கு அரசுக்கு மருத்துவ மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.

எம்.டி, எம்.எஸ், உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என்பது விதியாக இருந்து வந்தது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மருத்துவ கல்வி இயக்குநரகத்தில், பொது சுகாதாரத்துறை இயக்குநர், மருத்துவ பணிகள் இயக்குநர் உள்ளிட்ட மருத்துவத்துறையின் உயர் அலுவலர்களுடன் அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் ஆலோசனை நடத்தியது. அதில், இரண்டு ஆண்டுகளாக இருந்த அரசு சாரா முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி பணியை ஓராண்டாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிப்பை வரவேற்பதாக மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஆண்டுக்கு 700 முதுநிலை பட்டதாரி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் அரசு சாரா பணியில் சேருகின்றனர். இதில் வெளிமாநில பட்டதாரி மருத்துவர்களும் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணி செய்யும் நிலை ஏற்படுகிறது.

இதையும் படிங்க
  1. மருத்துவர்களை கண்காணிக்க சிசிடிவி கேமராவா! இது அவமானப்படுத்தும் செயல் என சங்கம் எதிர்ப்பு!
  2. கர்ப்பிணியின் மலக்குடலை கத்தரித்த விவகாரம்; மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!
  3. “என் மீது அவதூறு பரப்புகிறார்கள்” கிண்டி மருத்துவமனை விவகாரத்தில் மருத்துவர் கொடுத்த புகார்!

ஒப்பந்த பணிக்காலத்தை குறைத்ததன் மூலம் தமிழ்நாடு மருத்துவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும் எனவும், பயிற்சி முடித்தவுடன் தனியார் மருத்துவமனையில் பலர் சேர்ந்துவிடுகின்றனர். இதனால் மருத்துவர்கள் பற்றாக்குறையும் ஏற்படுகிறது.

இதனை போக்க விருப்பப்படும் முதுநிலை மருத்துவர்களை பணியில் தொடர வைக்க வேண்டும். இதன் வாயிலாக அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்கள் குறைக்கப்படுவதோடு, அரசு விரைந்து அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள எளிமையாக இருக்கும். இதனால் நிரந்தர வேலைவாய்ப்பை செய்து தர வேண்டும் எனவும் மருத்துவ மாணவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, அரசு மற்றும் அரசு சாராத முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களுக்கான பயிற்சி காலம் ஓராண்டு முடித்து விட்டனர் என்பதற்கான சான்றிதழை மருத்துவக்கல்வி இயக்குநரகம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநரகம் அவர்கள் ஓராண்டு பணி முடித்தற்கான சான்றிதழ்களை அளித்தால் அவர்களை பணியில் இருந்து விடுவிப்போம் எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.