ETV Bharat / state

"அதிமுக கட்சி வேஷ்டி தான் கட்டுகிறேன்.. முடிந்தால் வழக்கு போடுங்கள்" - வைத்திலிங்கம் சவால்! - OPS Supporter Vaithilingam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 5:05 PM IST

Updated : Sep 15, 2024, 5:19 PM IST

அதிமுக வரலாறு பற்றி பேசுவதற்கு இங்கு என்னைவிட யாருக்கும் தகுதி இல்லை, கட்சி வேஷ்டி நான் கட்டுகிறேன், தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் ஓபிஎஸ் ஆதரவாளரும், எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வைத்திலிங்கம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து வைத்திலிங்கம் கூறியதாவது, “எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பம். அதிமுகவின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான். அதன்படி, அதிமுக இணைந்து 2026-ல் ஆட்சிக்கு வரவேண்டும். அதிமுக வரலாறு பற்றி பேசுவதற்கு இங்கு என்னைவிட யாருக்கும் தகுதி இல்லை.

இதையும் படிங்க: “பங்கு கேட்கும் திருமாவளவன்.. திமுகவிற்கு பயம்..” ஜெயக்குமார் கருத்து!

2025 பிப்ரவரிக்குள் அதிமுக இணைகிறது. 2026-ல் வலிமையாக மீண்டும் ஆட்சிக்கு வரும். அதிமுக பொதுச் செயலாளரை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், விதியை மாற்றி தேர்ந்தெடுத்துள்ளனர். அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தி வருகிறேன். நான் கட்சி வேஷ்டி தான் கட்டுகிறேன். தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போட்டு பார்க்கட்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Last Updated : Sep 15, 2024, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.