ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு.. காரணம் என்ன? - chennai airport - CHENNAI AIRPORT

Chennai Airport: சென்னை விமான நிலைய சர்வதேச கார்கோ பிரிவில் அலுவலகப் பணிக்காக வந்திருந்த தனியார் நிறுவன ஊழியர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

chennai airport
சென்னை விமான நிலையம் கோப்பு புகைப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 6:44 PM IST

சென்னை: சென்னை கிழக்கு தாம்பரம் மணிமேகலை தெருவில் வசித்து வரும் சங்கரநாராயணன் (54), சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், அலுவலகப் பணியின் காரணமாக சென்னை விமான நிலைய சர்வதேச கார்கோ பிரிவிற்கு வந்துள்ளார்.

இதன்படி, நேற்று (செவ்வாய்) இரவு 10.30 மணி அளவில் பணியில் இருந்தபோது, சங்கரநாராயணன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, விமான நிலைய கார்கோவில் பணியில் இருந்த ஊழியர்கள், உடனடியாக சங்கரநாராயணனை சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சங்கரநாராயணன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவருக்கு திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதை அடுத்து, சென்னை விமான நிலைய போலீசார் வந்து, சங்கரநாராயணனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுவனைக் கடித்த வெளிநாட்டு ரக நாய்.. ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் பரபரப்பு! - CHENNAI DOG BITE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.