ETV Bharat / state

கோவையில் மலக்குழி மரணம்! தூய்மை பணியில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற சென்ற நபர் உயிரிழந்த பரிதாபம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 10:35 PM IST

Covai septic tank dead: கோவையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் தூய்மை பணியில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அவர்களை காப்பாற்ற சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்த போது ஏற்பட்ட மூச்சுத்திணறல்

கோயம்புத்தூர்: கோவை உடையம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிக்காக குணா, ராம் ஆகிய 2 தொழிலாளிகளை மோகனசுந்தரலிங்கம் என்ற ஒப்பந்ததாரர் அழைத்து சென்றுள்ளார். அப்போது தொழிலாளர்கள் இருவரும், மூச்சு திணறுவதாக கூறியுள்ளனர்.

அப்போது இருவரையும் காப்பற்ற முயன்ற மோகனசுந்தரலிங்கம், மூச்சுத்திணறி செப்டிக் டேங்க்கில் விழுந்துள்ளார். இந்நிலையில், உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் தொழிலாளர்கள் இருவரும் நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட பிறகே, அவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: “சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியே”- கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.