நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரக்காலமாக தொடர் கனமழை மற்றும் பலத்த காற்று வீசிவருகிறது. இதனால் இன்று பல இடங்களில் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் மலை ரயில் பாதையில் விழுந்து உள்ள மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பணிகள் விரைவில் நிறைவடைந்து, போக்குவரத்து துவங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து உள்ளூர்வாசி தினேஷ் கண்ணன் கூறுகையில், “ எங்கள் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூர், உதகை இடையிலான மலை ரயில் பாதை உட்பட பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயில் பயணம் மேற்கொள்ள முடியாமல். ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது” எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கனமழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை!