ETV Bharat / state

தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற காவல் கண்காணிப்பாளர்கள்.. போதைப்பொருள் ஒழிப்பில் முனைப்பு! - NEW SP APPOINTED in TAMIL NADU - NEW SP APPOINTED IN TAMIL NADU

New superintendent of Police Appointed: தமிழகத்தின் நீலகிரி, தூத்துக்குடி, கோவை, திருப்பத்தூர் வேலூர், திருவண்ணமலை ஆகிய மாவட்டங்களில் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

எஸ்பிக்கள்
எஸ்பிக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 11:10 PM IST

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்பி)இடமாற்றம் செய்து, தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தின் 65வது காவல் கண்காணிப்பாளராக என்.எஸ்.நிஷா இன்று உதகையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

என்.எஸ். நிஷா
என்.எஸ். நிஷா (Credits- ETV Bharat Tamil Nadu)

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நீலகிரி மாவட்டமானது, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகம் ஏற்படும் மாவட்டம் என்பதால், கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதேபோல், மனித-வனவிலங்கு மோதல் அதிகம் ஏற்படும் மாவட்டமாக உள்ளதால், அதனை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நீலகிரி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எல்லையில் அமைந்துள்ளதால், இங்கு உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

ஆல்பர்ட் ஜான்
ஆல்பர்ட் ஜான் (Credits- ETV Bharat Tamil Nadu)

அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த பாலாஜி சரவணன் கோயம்புத்தூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், தூத்துக்குடியின் புதிய எஸ்பியாக ஆல்பர்ட் ஜான் மாற்றம் செய்யப்பட்டார். இன்று பதவியேற்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “சமூகம் சார்ந்த பிரச்சினை மற்றும் சாதி ரீதியான பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படும். போதைப் பழக்கம் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப்படும். தூத்துக்குடி கடலோரப் பகுதியில் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. இவை கட்டுக்குள் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்தார்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன் (Credits- ETV Bharat Tamil Nadu)

அதேபோல், கோவை மாவட்டத்தின் 43வது காவல் கண்காணிப்பாளராக, முன்னதாக திருவண்ணாமலை எஸ்.பியாக பணியாற்றிய கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது பேசிய அவர், “கோவையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களைத் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். போதைப் பொருள் நடமாட்டம் தடுக்கப்படும். போதைப் பொருள் விவகாரத்தில் முக்கிய கவனம் எடுத்து கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்தலின் விளைவு குறித்தான விழிப்புணர்வு நிகழ்வுகள் அதிக அளவில் ஏற்படுத்தப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

ஸ்ரேயா குப்தா
ஸ்ரேயா குப்தா (Credits- ETV Bharat Tamil Nadu)

மேலும், திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து இதுவரை நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்று பணியாற்றினர். இந்நிலையில், இன்று ஐந்தாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருப்பத்தூரின் முதல் பெண் காவல் கண்காணிப்பாளராகவும் ஸ்ரேயா குப்தா பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இவர், “திருப்பத்தூரில் கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நானும் ஒரு பெண் என்பதால் தயவு காட்ட மாட்டேன். குற்றச் சம்பவங்களை படிப்படியாக குறைப்பேன்” எனக் கூறினார்.

மதிவாணன்
மதிவாணன் (Credits- ETV Bharat Tamil Nadu)

அதேபோல், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த மணிவண்ணன், ஆவடி காவல் சிறப்பு படை 2வது அணியின் கமாண்ட் ஆக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, சேலம் மாநகர் துணை ஆணையராக பணிபுரிந்து வந்த மதிவாணன், வேலூர் புதிய எஸ்பி ஆக இன்று பொறுப்பேற்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வேலூர் மாவட்டத்தில் ரவுடிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். வேலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மீது களங்கம் ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு மீது களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிலும் போலீசார் தங்களின் பணியை சரியாக செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா கடத்துபவர்கள் மீதும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீதும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மரு. பிரபாகரன்
மரு. பிரபாகரன் (Credits- ETV Bharat Tamil Nadu)

மேலும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற மரு.பிரபாகரன் இன்று பொறுப்பேற்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "பிரிவினையை ஆதரிக்கும் சித்தாந்தங்களுள் திராவிடமும் ஒன்று" - ஆளுநர் ஆர்.என்.ரவி சாடல்! -

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.