ETV Bharat / state

'இது வேற மாதிரி டிவிஎஸ் XL' - விழிப்புணர்வு பேரணியில் கவனத்தை ஈர்த்த மெக்கானிக்! - Modified TVS XL bike

Modified TVS XL bike: செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் ஒருவர் தனது டிவிஎஸ் சூப்பர் எக்ஸ்.எல் வாகனத்தை வித்தியாசமாக மாற்றிய நிலையில், அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெக்கானிக் வடிவமைத்த வண்டி
மெக்கானிக் வடிவமைத்த வண்டி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 1:14 PM IST

மயிலாடுதுறை: ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், மயிலாடுதுறையில் மயிலை இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 200க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

பொதுமக்கள் கவனத்தை ஈர்த்த வாகனம் (Credit - ETV Bharat)

செம்மங்குளம் பகுதியில் தொடங்கிய பேரணியை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் மணவாளன் தொடக்கி வைத்து, பேரணியில் பங்கேற்றார். இப்பேரணி காந்திஜி சாலை, மணிக்கூண்டு, பட்டமங்கல தெரு, ஸ்டேட் பேங்க் சாலை, அரசு மருத்துவமனை சாலை, கச்சேரி சாலை வழியாக சென்று கேணிக்கரை பகுதியில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்றவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.

அதனைத்தொடர்ந்து இருசக்கர மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட இருசக்கர வாகன சரிபார்போர் ஒருங்கிணைப்பு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் ஒருவர் தனது டிவிஎஸ் சூப்பர் எக்ஸ்.எல் (TVS Super XL) வாகனத்தை வித்தியாசமாக மாற்றி அடையாளம் தெரியாத வண்ணம் புதுவிதமாக அமைத்துள்ளார். அந்த வண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இந்த வண்டியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: பத்தாண்டுகளை கடந்த தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை திட்டம்; 13.98 லட்சம் உடல்களை சுமந்து தொடரும் பணி! - Free Hearse Service

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.