ETV Bharat / state

நெல்லையை மிரட்டும் கள்ளக்கடல்.. 2.7 மீ வரை கடல் அலை உயரக்கூடும் என ஆட்சியர் எச்சரிக்கை! - nellai collector warns

Nellai collector warns: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி முதல் கூடு தாழை வரை உள்ள கடற்கரை பகுதிகளில் அதீத அலை ஏற்பட வாய்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் (Credit - District Collector X Page Tirunelveli)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 12:07 PM IST

திருநெல்வேலி: தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கள்ளக்கடல் உருவாக வாய்ப்பு இருப்பதாக, இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்புளி முதல் கூடு தாழை வரை உள்ள கடற்கரைகளில் கள்ளக்கடல் என்று அழைக்கப்படும் அதீத அலை ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கடல்சார் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் 2.4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் வரை கடல் அலை மேலெழும்ப கூடும் எனவும், ஜுன் 11 ம் தேதி இரவு 11:30 மணிவரை இது நேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கி எழும் அலைகளின் எழுச்சி நாளை இரவு 11.30 மணி வரை 1.6 மீ முதல் 1.9 மீ வரை அலைகள் எழலாம்.

எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்ட புளி முதல் கூடு தாழை வரை உள்ள கடற்கரையோர மீனவர்கள் கவனமாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு வினாடிக்கு புள்ளி நான்கு மீட்டர் முதல் புள்ளி ஐந்து மீட்டர் வரை நாளை காலை 10:00 மணி வரை இருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் கடல்சார் தகவல் மையம் அளித்துள்ள தகவல்தான் என்றும் இதன் காரணமாக எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அளிக்கப்படவில்லை எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இது ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பு தான் என்றும், இதன் காரணமாக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு சிறப்பு எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'கள்ளக்கடல்' என்ற வார்த்தை தெற்கு கேரளா பகுதியில் உருவாகி உள்ளது. கள்ளக்கடல் என்பது எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் திடீரென ராட்சத அலை உருவாகி சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கள்ளக்கடல் நிகழ்வானது திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளத்திற்கு ஒப்பீடாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 28 ஆண்டுகளுக்கு முன் லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் மீண்டும் புகார்தாரரிடம் ஒப்படைப்பு..கோவையில் நடந்த சுவாரஸ்யம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.