ETV Bharat / state

கோவையில் சரக்கு வாகன ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை.. 3 பேர் கைது! - Coimbatore driver murder - COIMBATORE DRIVER MURDER

Coimbatore driver murder: கோவை கிணத்துக்கிடவு அருகே சரக்கு வாகன ஓட்டுநர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவர் உள்பட மூன்று பேரை நெகமம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சரக்கு வாகன ஓட்டுநர்
கொலை செய்யப்பட்ட சரக்கு வாகன ஓட்டுநர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 3:29 PM IST

Updated : Jul 6, 2024, 7:50 PM IST

கோயம்புத்தூர்: கிணத்துக்கிடவு அருகே வடசித்தூர், செட்டிபாளையம் சாலையில் சரக்கு வாகனத்தில் சென்ற டிரைவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டம், சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(32), இவர் சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று பிரபாகரனிடம் சரக்கு வண்டி வாடகைக்கு வேண்டும் எனக்கூறி இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவரையும் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, வடசித்தூர், செட்டிபாளையம் சாலையில் சரக்கு வாகனத்தில் செல்லும் போது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், திடீரென பிரபாகரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில், சாலையில் நடுவில் நீண்ட நேரமாக சரக்கு வாகனம் நின்றதால், அவ்வழியேச் சென்றவர்கள் சிலர் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை எட்டிப் பார்த்த போது ஓட்டுநர் கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சரக்கு வாகன ஓட்டுநர் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், போத்தனூரைச் சேர்ந்த சாதிக் பாஷா, மணிகண்டன் மற்றும் சிறுவர் ஒருவர் என மூவரையும் நெகமம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், கொலை செய்த நபர்களை 24 மணிநேரத்தில் தனிப்படை போலீசார் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவை எம்பிக்குச் சொந்தமான இடத்தில் டாஸ்மாக்.. கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்! - Protest To Close TASMAC

Last Updated : Jul 6, 2024, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.