ETV Bharat / state

போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் மீதும் லுக் அவுட் நோட்டீஸ்!

Jaffer Sadiq drug smuggling case: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்-க்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர்கள் இருவர் மீதும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

Jaffer Sadiq Drug Smuggling Case
Jaffer Sadiq Drug Smuggling Case
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 7:48 AM IST

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி, மூன்று ஆண்டுகளாக சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை வலைவீசித் தேடிவந்தனர்.

மேலும், ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 15 நாட்கள் ஜாபர் சாதிக்கைத் தீவரமாக தேடிவந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி (சனிக்கிழமை) ராஜஸ்தானில் மாநிலம் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "ஜாபர் சாதிக்குடன் மு.க.ஸ்டாலினின் குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது" - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

மேலும், இவர்களும் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரகள் தற்போது வரையிலும் தலைமறைவாக உள்ளதால், அவர்களுக்கு எதிராக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளனர்.

அதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் மீதான 'லுக் அவுட் நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் கைது செய்ய முடியும் எனப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதர்கள் இருவருடனும் யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர்? என்பது குறித்தும், அவர்களின் செல்போன் எண்களைக் கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு செய்து வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜாபர் சாதிக் கடல் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்களைக் கடத்தினாரா? - என்சிபி அதிகாரிகள் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.