ETV Bharat / state

"கூவம் ஆற்றில் தடைபடும் நீரோட்டம்.. பாடிக்குப்பம் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகும் அபாயம்!" காரணம் என்ன? - cooum river issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 5:24 PM IST

கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) கொட்டிய கட்டிடக் கழிவுகள் இன்னும் அகற்றப்படாததால் ஆற்றில் நீரோட்டம் தடைபட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யுமானால் பாடிக்குப்பம் குடியிருப்புகளில் ஆற்றுநீர் புகும் சூழல் உருவாகும் என மூத்த பத்திரிக்கையாளர் சதீஷ் லெட்சுமணன் குற்றச்சாட்டியுள்ளார்.

கூவம் ஆறு
கூவம் ஆறு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஈரடுக்கு அதிவிரைவு மேம்பால சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கூவம் ஆற்றில் கட்டுமானக் கழிவுகளை கொட்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதால் பருவமழை காலத்தில் இயற்கையாக நீர் செல்வது பாதிக்கப்பட்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யாநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அமர்வில் கடந்த 19 ஆம் தேதியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்வள ஆதரத்துறை வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி, “ஆற்றின் குறுக்கே கட்டட கழிவுகள் கொட்டுவதால் நீரோட்டத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக மூலம் ஆய்வு மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் முறையான ஆய்வை மேற்கொள்ளவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும்” என வாதிட்டார்.

அதனைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில், “ஈரடுக்கு மேம்பால கட்டுமான திட்டம் என்பது ஆற்றின் மேல் பாலம் அமைப்பது. அதனால் தான் தூண்கள் அமைக்க ஆற்றின் குறுக்கே கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டு தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக கழிவுகள் அப்புறப்படுத்தப்படும்” என வாதிட்டார்.

இதையும் படிங்க: "குஜராத் போய் பாருங்க, அப்போ தான் உலகத் தரம் என்னானு தெரியும்" - மு.க.ஸ்டாலினுக்கு எல்.முருகன் ஆலோசனை!

இதையடுத்து, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், “கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டிடக் கழிவுகளை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அகற்றிட வேண்டும் என தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும், கொடுக்கப்பட்ட நிபந்தனையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பின்பற்றவில்லை என்றால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், தீர்ப்பாயத்தில் நீர்வள ஆதரத்துறை முறையிடுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, வரும் அக்டோபர் 01 ஆம் தேதி நீர்வள ஆதாரத் துறை கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை முறையாக அகற்றியதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை வரும் அக்டோபர் 03 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டிடக் கழிவுகளை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அகற்றிட வேண்டும் என தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது வரையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மூத்த பத்திரிகையாளர் சதீஷ் லெட்சுமணன் குற்றச்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில், "கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) கொட்டிய கட்டிடக் கழிவுகள் இன்னும் அகற்றப்படாததால் ஆற்றில் நீரோட்டம் தடைபட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யுமானால் பாடிக்குப்பம் குடியிருப்புகளில் ஆற்றுநீர் புகும் சூழல் உருவாகும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.