ETV Bharat / state

நான் ஜெயித்து விட்டேன்!... மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் சக்தி ஆனந்த் கான்ஃபிடன்ட்! - sakthi ananth

MyV3 Ads Sakthi Ananth: திரைப்படத்திற்கு எப்படி எதிர்மறை விமர்சனங்கள் இருந்தால் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படுமோ அதுபோன்று எதிர்மறை விமர்சனங்களால் எங்கள் நிறுவனம் உயர்ந்துள்ளது என மைவி3 ஆட்ஸ் நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மைவி3 ஆட்ஸ் நிறுவனம் உரிமையாளர் சக்தி ஆனந்த்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 10:58 PM IST

மைவி3 ஏட்ஸ் நிறுவனம் உரிமையாளர் சக்தி ஆனந்த்

கோயம்புத்தூர்: மைவி3 ஆட்ஸ் நிறுவனம் தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதாகவும், மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது என அந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் துறையினர் சக்தி ஆனந்திற்கு சம்மன் அனுப்பினர். இதன் பேரில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சக்தி ஆனந்த் ஆஜராகி இன்று (பிப்.05) விளக்கம் அளித்தார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு பின், சக்தி ஆனந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது. அதற்காக ஆஜராகி தனது விளக்கத்தை தெரிவித்தேன். இன்று காலை இதே நிறுவனம் வேறு பெயரில் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தவர்களின் நிறுவனத்தில் நானும் பணிபுரிந்ததை ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி புதிய நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது அவர்கள் வந்து புகார் அளிப்பதற்கான நோக்கம் என்ன. தற்பொழுது இந்த நிறுவனம் ஊடக வெளிச்சம் பெற்ற பின்பு இது குறித்து பேசினால் தாங்களும் பிரபலமாகலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் புகார் அளித்திருக்கலாம்.

விளம்பரத் துறையும் வியாபார துறையும் எத்தனை நாட்கள் இருக்குமோ அவ்வளவு நாட்கள் எனது நிறுவனமும் இயங்கும். அன்றைய தினம் கோவை நீலாம்பூர் பகுதியில் திரண்ட மக்களை நான் அழைக்கவில்லை. அவர்களாகவே தான் வந்தனர். அவர்களைத் தான் ஒழுங்கு மட்டுமே படுத்தினேன். அரசியல் பின்புறம் இல்லாமலேயே இத்தனை பேர் தன் எழுச்சியாக வந்தபோதே நான் ஜெயித்து விட்டேன்.

எங்கள் பின்னால் எந்த ஒரு அரசியல் பின்புலம் இல்லை. எங்கள் நிறுவனத்தின் பொருட்களை போலி என கூறுபவர்கள் அதனை நிரூபித்து காட்டடும். அவை போலி என்றால் அதற்கான தர சான்றிதழ்களை அளித்தவர்கள் யார். எங்கள் நிறுவனத்தில் இருப்பதெல்லாம் இந்திய மருந்துகள், பாரம்பரிய மருந்துகள். இதனை விற்பதற்கு யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு.

மக்கள் அவர்களாகவே விரும்பி வாங்கி உட்கொள்கின்றனர். அந்த பொருட்கள் தயாரித்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன். திரைப்படத்திற்கு எப்படி எதிர்மறை விமர்சனங்கள் இருந்தால் அந்த திரைப்படம் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படுமோ அதுபோன்று எதிர்மறை விமர்சனங்களால் எங்கள் நிறுவனம் தற்பொழுது மேலும் உயர்ந்துள்ளது.

யாரேனும் அனுமதி பெற்று தந்தால் அன்றைய தினம் கூடிய கூட்டத்தைப் போல் ஒரு வாரத்தில் சுமார் 20 லட்சம் பேரை என்னால் கூட்ட முடியும். எங்கள் நிறுவனத்தில் யாரும் முதலீடு செய்யவில்லை. பொருட்களை மட்டுமே வாங்கி உள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை" - அமைச்சர் ராஜகண்ணப்பன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.