திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த இருனாப்பட்டு கிராமத்தில் எகிலேரி என்ற நீரோடை உள்ளது. இந்த நீரோடையை ஒட்டி ஆண்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்) என்பவருக்கு சொந்தமாக தென்னந்தோப்பிலான நிலம் உள்ளது. இவர் அடிக்கடி தனது நிலத்திற்கு சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில், சத்தியமூர்த்தி வழக்கம்போல கடந்த 5ஆம் தேதி தன்னுடைய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த எகிலேரி நீரோடையில், சந்தேகத்துக்குரிய வகையில் எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், பூ, தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து மர்ம நபர்கள் யாரோ மாந்திரீக பூஜை செய்துள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக, அங்கு பள்ளம் தோண்டி ஏதோ உடலை புதைத்து வைத்தது போல் அடையாளங்களும் தென்பட்டன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மண்ணில் புதைந்திருப்பது என்னவென்று தெரியாமல் பீதி அடைந்திருந்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மடிப்பாக்கம் சிலிண்டர் விபத்து: இளம்பெண் லின்சி உயிரிழந்த சோகம்..!
அதன் பேரில், திருப்பத்தூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பூஜை செய்த இடத்தைத் தோண்டி பார்த்தனர். அப்போது அதில் துணி மற்றும் ஒரு இளைஞரின் புகைப்படத்தை வைத்து மாந்திரீக பூஜை செய்துள்ளனர்.
மேலும், அந்தப் இளைஞரின் புகைப்படத்தின் பின்னால், ''கோவிந்தராஜுக்கு கட்டு போடப்பட்டுள்ளது, கை, கால், முடி ஆகிய அனைத்திற்கும் கட்டு போடப்பட்டுள்ளது'' என அதில் எழுதி வைத்து பூஜை செய்துள்ளனர்.
இதனால் குழியில் என்ன இருக்குமோ? ஏது இருக்குமோ? என எண்ணி குழியை தோண்டி பார்த்த அதிகாரிகளுக்கு பயங்கரமான ட்விஸிட் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்