சென்னை: வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் சத்தியசீலா (32), இவர் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் மின்வாரியத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
மேலும், சத்தியசீலாவிடன் அவர் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் இணைப்பை துண்டித்து விடுவதாகவும், தான் அனுப்பும் லிங் (link) மூலம் உடனடியாக பணத்தை கட்டுமாறு கூறியுள்ளார். அதனை அடுத்து சத்தியசீலாவின் வங்கி கணக்கில் இருந்து மூன்று முறை என மொத்தம் ரூ.1 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
இதே போல், அதே பகுதியை சேர்ந்த ஜமுனா ராணி என்பவரிடம் வங்கி அதிகாரிகள் பேசுவதாக கூறிய மர்ம நபர்கள், அவரது கிரெடிட் கார்டுக்கு ரிவார்டு கிடைத்து இருப்பதாக கூறி அவரது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.75 ஆயிரம் பணத்தை திருடியுள்ளனர். மேலும், அதேபகுதியைச் சேர்ந்த கவுசல்யா என்பவரிடம், வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி ரூ.6 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
மேலும், வளசரவாக்கத்தை சேர்ந்த அரிகரன் என்பவரிடம் ரூ.45 ஆயிரம், அரும்பாக்கத்தை சேர்ந்த கவிதா என்பவரிடம் ரூ.40 ஆயிரம் என மர்ம நபர்கள் பலரிசம் கைவரிசையைக் காட்டி நூதன திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னை நீச்சல் குளத்தில் சிறுவன் பலி.. தாய் கண் முன்னே நடந்த துயரம்!