ETV Bharat / state

மேல்மா சிப்காட் விவகாரத்தில் அரசின் முடிவு என்ன? - கனிமொழி எம்பி பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 11:37 AM IST

MP Kanaimozhi: மத்திய அரசு, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை கிரிமினல்களை நடத்துவது போலவும், தீவிரவாதிகளை நடத்துவது போலவும் நடத்துகிறார்கள் என்றும், பாஜக யாரையும் குற்றம் சொல்லக்கூடிய இடத்தில் இல்லை என்றும் கூறினார்.

கனிமொழி
கனிமொழி
கனிமொழி

வேலூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில், 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. திமுக தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவுரைப்படி, இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

இந்தப் பயணத்தில், தமிழ்நாட்டு மக்களின் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பெறப்பட்டு, அதனை நாடாளுமன்றத்தில் ஒலித்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக திமுக சார்பில் கனிமொழி எம்.பி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டனர்.

அந்த வகையில், நேற்று (பிப்.23) வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, பரிந்துரைகளை மனுக்களாக அளித்தனர்.

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வணிகர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும், தங்களின் மனுக்களை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழியிடம், தேர்தல் அறிக்கை குழு எல்லாம் கண்துடைப்பு என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார் என்ற கேள்விக்கு, ”பிரதமர் மோடி இரண்டு தேர்தலுக்கு முன்பு 15 லட்சம் ரூபாய் அனைவருடைய வங்கிக் கணக்கிற்கு வரும் என்று கூறினார். 15 லட்சத்திற்காக நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம். 15 லட்சம் ரூபாய் அனைவருக்கும் போட்ட பிறகு, அண்ணாமலை மற்றவர்களை விமர்சிக்கும் உரிமை உண்டாகும்” என்று பதிலளித்தார்.

தேர்தல் பத்திரம் நன்கொடையில் திமுக அதிகமாக பணம் வாங்கி உள்ளனர் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “இந்தியாவில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து 50 சதவீதம் கூட தேர்தல் பத்திரம் நன்கொடை வாங்கவில்லை. 59 சதவீதத்திற்கும் மேல் ஒரே கட்சிக்கு தேர்தல் பத்திர நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அது பாஜகதான். அவர்கள் யாரையும் குற்றம் சொல்லக்கூடிய இடத்தில் இல்லை” என்று கனிமொழி கூறினார்.

பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை திமுக தயாரிக்கும் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளது குறித்த கேள்விக்கு, தவறாக ஆட்சி நடத்தி, தமிழகத்தை அனைத்து வகையிலும் பின்னோக்கி நகரக் கூடிய வகையில் வைத்து விட்டுச் சென்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், தமிழ்நாடு எல்லா துறைகளும், எல்லா நிலைகளிலும் முன்னேறி வருகிறது. இதனால் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கின்ற அளவிற்கு அவர்களுக்கு தெரியாது.

ஏனென்றால், ஆட்சி எப்படி நடத்துவது என்று தெரிந்தால்தானே, தேர்தல் அறிக்கையை பற்றி தெரியும் என்று பதில் அளித்தார். மேலும் பேசிய அவர், “இந்தியா கூட்டணியில் சேரக்கூடாது என பாஜகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாஜகவை எதிர்த்து பேசும் அத்தனை பேருக்கும் அழுத்தங்கள், தாக்குதல்கள், பிரச்னைகள் கொடுப்பது இன்றைக்கு இருக்கும் மத்திய அரசின் தொடர் நிலைப்பாடு.

மேலும், மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை கிரிமினல்களை நடத்துவது போலவும், தீவிரவாதிகளை நடத்துவது போலவும் நடத்துகிறார்கள். நியாயத்திற்காக போராடும் விவசாயிகளின் குரலை கேட்பதற்குகூட மத்திய அரசு தயாராக இல்லை. அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கும் ஊடகங்களின் நிலை என்ன என்பது உங்களுக்குத் தெரியும். பெண்கள் பாதுகாப்பு என்பது முக்கியமாக எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயம்.

திருவண்ணாமலை மேல்மா பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் சிப்காட் தேவை என்றும் பலர் குரல் கொடுக்கின்றனர். இது குறித்து அமைச்சரவையில் கூறி நல்ல முடிவை எடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக ஊழல் அமைச்சர்கள் விரைவில் வேட்டையாடப்படுவார்கள்.. அண்ணாமலை தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.