ETV Bharat / state

கோவை அருகே தென்னை மரத்தில் மோதி நிலைகுலைந்த கார்.. தாய், மகன் பலியான சோகம்..! - POLLACHI CAR ACCIDENT

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தென்னை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான காரில் பயணித்த தாய், மகன் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2024, 3:01 PM IST

கோயம்புத்தூர்: குடும்பத்துடன் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில், காரில் பயணித்த தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அணை புதூரை சேர்ந்தவர் ஆஷா (41). இவரது மகன்கள் அனுப்ராஜா (4) அபிலேஸ்வரன் (15) மற்றும் அவரது மகள் அஸ்வதி (21) ஆகியோர் திருப்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லங்கோட்டில் உள்ள மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலுக்கு விமல்ராஜ் (35) என்பவரின் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை விமல்ராஜ் ஓட்டியுள்ளார்.

இந்நிலையில், அந்த கார் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, பாப்பாத்தி பள்ளம் அருகே வந்த போது நிலை தடுமாறி இடது புறம் இருந்த தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை: திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்கவும் - மாவட்ட ஆட்சியர்!

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆஷா (41) மற்றும் அவரது மகன் அனுப்புராஜா (4) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மற்றொரு மகன் அபிலேஸ்வரனுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இறந்த இருவரின் பிரேதமும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தாய் மகன் இறந்த சம்பவம் குடும்பத்தார் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், விபத்து குறித்து ஆனைமலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.