ETV Bharat / state

கிணற்றில் விழுந்த தாயை காப்பாற்ற முயன்ற மகள்.. திருப்பூர் அருகே அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! - 2 PERSON DIED

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கிணற்றில் விழுந்த தாயை, காப்பாற்ற முயன்ற மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .

கோப்புப்படம்,  மீட்புப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்
கோப்புப்படம், மீட்புப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் (Photo Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2024, 9:30 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னமரத்துதோட்டம் பகுதியை சேர்ந்த மயிலாத்தாள் (87). இவரது மூத்த மகள் புஷ்பவள்ளி (65) குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மயிலாத்தாள் நீண்ட நேரம் வீட்டில் இல்லாததை அறிந்த புஷ்பவல்லி, அவரை தேடி அருகிலிருந்த தோட்டத்துக் கிணற்றைப் பார்த்துள்ளார்.

அப்போது கிணற்றில் தவறி விழுந்திருந்த தனது தாய் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த புஷ்பவள்ளி, அவரை காப்பற்ற கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் இருவரும் நீரில் மூழ்கினார். இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கும் ., போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 50 அடி கிணற்றில் விழுந்த காட்டெருமை! 12 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், கிணற்றில் விழுந்து உயிரிழந்த இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் விழுந்த தாயை, காப்பாற்ற குதித்த மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.