ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தல் 2024; விழுப்புரம் மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு! - Lok Sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha election 2024: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

விழுப்புரம் மாவட்டத்தில் 2000கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 10:19 PM IST

விழுப்புரம்: இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து வாக்குசாவடிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, அமைதியான முறையில் பொதுமக்கள் எந்தவித அச்சமும், தயக்கமும் இன்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 1,966 வாக்குச்சாவடிகளும், 1,068 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 51 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒரு காவலர் அல்லது சிறப்பு காவலர்களால் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட தேர்தல் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் தலைமையில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையிலும், 16 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 55 காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உட்பட 2,200, 344 CAPF (Central Armed Police Force) தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 300 ஊர்காவல் படையினர் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 100 காவலர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மாலைக்கு மேல் அரசியல் கட்சியினரோ, வேட்பாளரோ தேர்தல் பிரச்சாரம் ஒலிபெருக்கி வாயிலோ, நேரடியாகவோ, (WhatsApp, Facebook, Twitter, Instagram, YouTube and etc.,) வாயிலாவோ பிரச்சாரம் மேற்கொண்டாலோ அல்லது பதிவு செய்தாலோ தேர்தல் நடத்தை விதி மீறியதாக காவல்துறையால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு ஆலையை அகற்ற வேண்டும்.. தேர்தலை புறக்கணிக்கும் வேடம்பட்டு மக்கள்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.