ETV Bharat / state

"திமுக வெற்றி பெற்றதற்கு முதல் காரணம் மோடி தான்".. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! - Udhayanidhi Stalin

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு 3 காரணங்கள் உள்ளது. அதில் முதல் காரணம் மோடி தான் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி மற்றும் உதயநிதி ஸ்டாலின்
நரேந்திர மோடி மற்றும் உதயநிதி ஸ்டாலின் (Credits - ETV Bharat and Udhay X page)

சென்னை: திமுக பவள விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 75 வயது நிரம்பியோருக்கு நிதியுதவி, சான்றிதழ், நினைவுப் பரிசும், 60 வயதைக் கடந்த 1,000 நபர்களுக்கு நிதியுதவிகளையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மோடிதான் முதல் காரணம்: இவ்விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மூன்று காரணங்கள் உள்ளது. முதலாவது காரணம் நரேந்திர மோடி தான், அவர்தான் திமுகவிற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார். நான் 23 நாட்கள் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தேன். அப்போது நான் சந்தித்த மக்கள் அனைவரிடமும் பாஜக மீது வெறுப்பு இருந்தது.

அதை தொடங்கி வைத்தது மோடி தான். தமிழ்நாட்டில் புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளின் போது ஒருமுறை கூட வராத மோடி, நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பிறகு 8 முறை முறை தமிழகத்தில் பிரச்சாரத்திற்காக வந்தார். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் அதற்கான உதவித்தொகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.

மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் ஏற்பட்டபோது தமிழக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது. ஆனால், மத்திய அரசு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் வழங்கவில்லை என குற்றம்சாட்டினார். ஜிஎஸ்டி வரியாக ஒரு ரூபாய் வழங்கினால், அதற்கு 28 பைசா மட்டுமே திருப்பி வழங்குகிறார்கள். இது போன்றவற்றை மக்கள் உணர்ந்ததன் காரணமாக, திமுகவை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: "வலுத்த கோரிக்கை பழுக்கும் நேரம்" முரண்படுகிறாரா துரைமுருகன்?

திமுக அரசின் திட்டங்கள்: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு 2வது காரணம், 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் சேமிக்கின்றனர். அதேபோல், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 1-5 வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகள் 20 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த தொடங்கியுள்ளனர். புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்த முடியாது என எதிர்கட்சிகள் தெரிவித்தனர். அப்போது, 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

திமுக வெற்றி: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு 3வது காரணம், திமுக உறுப்பினர்களாகிய நீங்கள் தான். ஒவ்வொரு தேர்தலிலும் திமுக வெற்றி கூட்டணி அமைக்கிறது. அந்தக் கூட்டணியை அமைத்து மு.க ஸ்டாலின் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்கிறார். கண்டிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் அதற்கு நாம் அனைவரும் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். திமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.