ETV Bharat / state

“மோடி வருவார்.. ரோடு ஷோ நடக்கும்” - சென்னையில் அண்ணாமலை பேச்சு! - bjp leader annamalai campaign

Annamalai K: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருவான்மியூரில் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, சென்னை மக்களை பார்ப்பதற்காக பிரதமர் மோடி மீண்டும் வரவுள்ளதாக தெரிவித்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
பிரதமர் மோடி மீண்டும் சென்னை வருகிறார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 4:27 PM IST

சென்னை: தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி மீண்டும் சென்னை வர உள்ளதாக, தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து திருவான்மியூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதி கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூரில், பாஜக சார்பில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்தவெளி வேனில் வந்த அண்ணாமலை மற்றும் வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜனுக்கு, அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் ஆடல், பாடலுடன் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

அப்பொழுது பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “சென்னை மக்கள் திமுக ஆட்சியாளர்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகின்றனர். கண்டிப்பாக சென்னைக்கு ஒரு மாற்றம் தேவை, அனைத்து பதவிகளிலும் இருப்பவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் சிங்காரச் சென்னையை சிக்கி சென்னையாக மாற்றி உள்ளனர். இதை மாற்றுவதற்கு நமக்கு கிடைத்திருக்கும் மருந்து, தமிழிசை சௌந்தரராஜன் மட்டுமே.

தமிழ்நாடு அரசியல் களத்தில் நான்கு, ஐந்து தலைமுறைகளாக நாற்காலியில் ஃபெவிகால் போட்டு அமர்ந்து உள்ளனர். ஆனால், நமது வேட்பாளர் இரண்டு மாநிலங்களின் ஆளுநர் பதவியையும் துறந்துவிட்டு, மக்கள் பணி செய்ய வந்துள்ளார். உறுதியாக மோடியின் 400 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழிசை ஒருவராக இருக்கப் போகிறார்.

தமிழிசை ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக வேலை செய்ய வேண்டும் என்றால், வருகின்ற 20 நாட்கள் ஒவ்வொரு தொண்டரும் வீடு வீடாக, வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, 20வது நாளில் ஒவ்வொருவரும் 100 ஓட்டுக்களைப் பெற வேண்டும், இதற்காக ஒவ்வொருவரும் வேட்பாளர் போன்று பணியாற்ற வேண்டும்.

திமுகவைச் சேர்ந்தவர்கள் பொய்யாக பேசிக்கொண்டு வருகின்றனர், ஆனால் நமக்கு உண்மை பேசுகின்ற கடமை உள்ளது. கெட்டவர்கள் ஏன் ஆட்சிக்கு வருகிறார்கள் என்றால், சில நல்லவர்கள் பேச மறந்து விடுகிறார்கள், எனவே வருகின்ற தேர்தலில் நல்லவர்கள் அனைவரும் பேச வேண்டும்.

இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்ல விரும்புகின்றேன், உங்களைப் பார்ப்பதற்காக பிரதமர் மோடி மீண்டும் சென்னை வருவார், வந்து கொண்டிருக்கிறார். சென்னையில் "ரோட் ஷோ" நடக்கும், நீங்களும் அருகில் இருந்து மோடியை பார்க்கலாம்‌, எனவே, தமிழிசை சௌந்தரராஜன் வெற்றியை உறுதிப்படுத்துங்கள்” என்று கூறினார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன், மைத்ரேயன், எஸ்.ஜி.சூர்யா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: "திமுக பயங்கரமா பொய் சொல்லும்.. பாஜக சொல்ற பொய்யை பயங்கரமா சொல்லும்" - விந்தியா ‘பன்ச்’ பரப்புரை! - Vindhya Campaign In Pudukkottai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.