ETV Bharat / state

"மயிலம், ரெட்டணையை பேரூராட்சியாக தரம் உயர்த்துக"- எம்எல்ஏ சிவக்குமார்! - மயிலம் எம்எல்ஏ சிவக்குமார்

மயிலம் மற்றும் ரெட்டணை ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை சட்டப்பேரவையில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் முன்வைத்துள்ளார்.

மயிலம் மற்றும் ரெட்டணையை பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 2:00 PM IST

விழுப்புரம்: கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் மற்றும் வேளாண் மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

இன்று பட்ஜெட் விவாதத்தில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், "மயிலம் தொகுதிக்குட்பட்ட தீவனூர் முதல் மயிலம் வரை உள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாகத் தரம் உயர்த்த வேண்டும்.

மயிலம் தொகுதிக்குட்பட்ட ஆலகிராமம், தென்புத்தூர் கிராமத்தின் இடையே உள்ள தொண்டி ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும். மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டிலிருந்து ஆலகிராமம் வழியாக தென்பத்தூர் வரை உள்ள ஒருவழிச்சாலையை இருவழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும்.

மயிலம் மற்றும் ரெட்டணை ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும். மயிலம் தொகுதிக்குட்பட்ட வல்லம் இரண்டாம் ஒன்றியத்தில் மேல்சேவூர் ஊராட்சியில் உள்ள கட்டாஞ்சிமேடு சிற்றூரை தனி ஊராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும்.

அதேபோல் மயிலம் தொகுதிக்குட்பட்ட நெடிமொழியனூர் ஊராட்சியில் உள்ள நெடி சிற்றூரை ஊராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும். பேரணி, பெரியதச்சூர் இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். கீழ்மாம்பட்டு கிராமத்திலிருந்து ரெட்டணை செல்லும் ஒருவழிச்சாலையை இருவழிச்சாலையாகத் தரம் உயர்த்த வேண்டும். வெள்ளிமேடுபேட்டை, மயிலம் சாலையில் தீவலூர் முதல் தழுதாளி வரை உள்ள இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாகத் தரம் உயர்த்த வேண்டும்.

மேலும் மோழியனூர் முதல் நெடி வரை சாலைகளை மேம்படுத்த வேண்டும். செண்டூர் - மயிலம் வரை உள்ள ஒருவழிச்சாலையை இருவழிச்சாலையாகத் தரம் உயர்த்த வேண்டும். தென்னாலப்பாக்கம் - பாதிராப்புலியூர் வரை உள்ள ஒருவழிச்சாலையை இருவழிச்சாலையாகத் தரம் உயர்த்த வேண்டும்.

பேரணி முதல் பெரியத்தச்சூர் வரை உள்ள ஒருவழிச்சாலையை இருவழிச் சாலையாகத் தரம் உயர்த்த வேண்டும். வெள்ளிமேடுபேட்டை- செம்பாக்கம் சாலையை மேம்படுத்த வேண்டும். ஆலகிராமம் - தென்புத்தூர் வரை உள்ள ஒருவழிச்சாலையை இருவழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை சட்டசபையில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்..! கூடுதலாக 1,184 பேருந்துகள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.