ETV Bharat / state

'ஊழல் யூனிவர்சிட்டிக்கு வேந்தர் மோடி; எடப்பாடி சிம்பிளி வேஸ்ட்' - மு.க.ஸ்டாலின் விளாசல் - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

MK Stalin Election campaign at coimbatore: திமுக கொங்கு பகுதியின் வளர்ச்சி திட்டங்களைத் தடுக்கிறது என மோடி கூறுவது பொய் எனவும், மோடி ஊழல் யூனிவர்சிட்டிக்கு வேந்தராக இருக்கத் தகுதியுடையவர் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

MK Stalin Speech in India alliance meet in Covai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 9:28 AM IST

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கூட்டத்தில் கோவை தொகுதி வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வர சாமி மற்றும் கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதி மணி ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "இந்தியாவின் எதிர்காலம், இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ராகுல் காந்தி. நாடு சந்திக்கும் 2வது விடுதலை போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன், திமுக தோளோடு தோள் நிற்கும். சோதனை காலத்தில் காங்கிரஸ் உடன் இருக்கும் கட்சி திமுக, இந்த கூட்டணி வெல்லும் கூட்டணி. சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது தமிழ்நாடு மக்கள் தனிப்பட்ட அன்பு கொண்டவர்கள். மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள் என்ற அண்ணாவின் வழியில், ராகுல் காந்தி மேற்கொண்ட நடைப்பயணத்தில், மக்கள் பிரச்சனைகளைத் தெரிந்து தேர்தல் அறிக்கை உருவாக்கியுள்ளார்.

திமுக வலியுறுத்தி வரும் சமூக நீதி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்துள்ளது. எப்போதும் வெளிநாட்டு டூரில் இருக்கும் பிரதமர் மோடி, தேர்தல் வந்துள்ளதால் உள்நாட்டு டூர் வருகிறார். அவர் எங்கும் பத்தாண்டு சாதனைகளைக் குறித்துப் பேசவில்லை. இந்தியா கூட்டணியை குடும்பக் கட்சி, ஊழல் கட்சி என வசைபாடிக் கொண்டிருக்கிறார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

ஊழல் யூனிவர்சிட்டி வேந்தர் மோடி?: தேர்தலில் நின்று மக்கள் வாக்களித்தால்தான் பதவிக்கு வர முடியும். தற்போது மோடி பேசுவது எங்களை மட்டுமல்ல, எங்களைத் தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான மக்களையும் அவமதிக்கிறார். ஊழல் பற்றி பேச பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும். ஊழல் யூனிவர்சிட்டிக்கு வேந்தராக இருக்க தகுதியுடையவர் பிரதமர் மோடி. இடி (ED), ஐடி (IT), சிபிஐ (CBI) போன்ற கூட்டணி அமைப்புகளை வைத்து மிரட்டித் தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்கியுள்ளார்கள். கார்பரேட் முதலாளிகளுக்காக பாஜக அரசு நடத்துகிறது.

கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடும் ஈபிஎஸ்: இதுகுறித்து, ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய போது பதில் சொல்லாமல் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினார்கள். மோடி ஒரு வாசிங் மெசின் வைத்து ஊழல்வாதிகளைச் சுத்தப்படுத்துகிறார். இது "யோக்கியன் வருகிறான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்ற பழமொழிக்கு ஏற்ப உள்ளது. மோடி மட்டுமல்ல, பத்தாண்டுகள் தமிழ்நாட்டைச் சீரழித்தவர், பழனிசாமி. நாம் இந்தியா கூட்டணி ஆள வேண்டும் என சொல்கிறோம். அவர் யார் ஆளனும், யார் ஆளக்கூடாது, யார் எதிரி என்பது கூடத் தெரியாமல், கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித் தர களத்திற்கு வந்துள்ளார்.

நம்பிய பலரின் முதுகில் குத்திய பழனிசாமி, கேட்டால் பாஜகவை எதிர்த்து பேச முடியாது என்பதற்கு கூட்டணி தர்மம் காரணம் என்கிறார். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் எடப்பாடி சிம்பிலி வேஸ்ட். ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளது. சொல்லாததையும் செய்வோம் என்பதைக் காட்டியுள்ளோம். மேலும், கோவையில் உலகத்தரத்தில் பிரம்மாண்ட நூலகம் ஒன்றை அமைக்க உள்ளோம்.

ஜிஎஸ்டி: தொழில் மிகுந்த கோவையை பத்தாண்டுகளாக பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்ற இரண்டு தாக்குதல் மூலம் பாஜக நாசம் செய்துள்ளது. பண மதிப்பிழப்பினால் பணப்புழக்கம் குறைந்து, பல தொழில்கள் முடிந்து போனது. ஜிஎஸ்டியினால் முதலாளிகளை கடனாளிகளாக ஆக்கியுள்ளது. 35% மில்கள் மூடும் நிலையில் உள்ளது. திமுக கொங்கு பகுதியின் வளர்ச்சி திட்டங்களைத் தடுக்கிறது என பிரதமர் மோடி கூறியது, வடிகட்டிய பொய்.

பாஜக கலவர கட்சியால் அமைதி போகும்; ஸ்டாலின் சாடல்: தமிழ்நாட்டில் ரூ.6,500 கோடி முதலீட்டில் தொழில் துவங்க இருந்த நிறுவனத்தை மிரட்டி குஜராத்திற்கு மாற்றினார்கள். இதுதான் போலி பாசம். இப்போது கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறார்கள். அமைதியான இடத்தில்தான் தொழில் வளர்ச்சி இருக்கும். பாஜக என்ற கலவர கட்சியை உள்ளே விட்டால் அமைதி, தொழில் வளர்ச்சி போய்விடும். தமிழ்நாடு வளர்ச்சியைத் தடுப்பது யார் என மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் இட்லி பிடிக்கும், பொங்கல் பிடிக்கும், தமிழ் பிடிக்குமென்று சொல்லும் போலி முகமூடி மொத்தமாக கிழிந்து தொங்குகிறது. தமிழ்நாட்டைப் புறக்கணித்த மோடிக்கு, தமிழ்நாடு சொல்ல வேண்டியது வேண்டாம் மோடி. தெற்கிலிருந்து வரும் குரல் இந்தியா முழுக்க கேட்கட்டும். பாஜகவையும், அதன் பி டீம் அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும். உங்களது வாக்குகள் இந்தியாவின், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காக்கட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே" எனப் பேசினார்.

இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்... - ELECTION FLYING SQUAD

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.