சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஆளும் ஜெஎம்எம் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்:தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்வதென்ன?
இந்தநிலையில் ஹேம்நாத் சோரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது," ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்!.
அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. உருவாக்கினாலும் - அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார். அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி!" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்