ETV Bharat / state

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்கும் டி.ஆர்.பாலு! - TR Balu in INDIA alliance meeting - TR BALU IN INDIA ALLIANCE MEETING

TR Balu in INDIA alliance meeting: இன்று டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அக்கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.பாலு(கோப்புப்படம்)
டி.ஆர்.பாலு(கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 12:38 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று பீகார், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 57 தொகுதிகளில் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இன்றைய ஆலோசனை கூட்டத்திற்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை, தேர்தலுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு பங்கேற்பார் என தகவல் வெளியானது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தனது பதிவில், "பாஜகவின் பத்தாண்டு கால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது.

இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது. தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல் வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஜூன் 4ஆம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நில அபகரிப்பு விவகாரம்; ஜோலார்பேட்டை போலீசாருக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - Jolarpet Police Station

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.