ETV Bharat / state

"விஜய் பாஜகவின் C- டீம்.. தவெக மாநாடு மிகப் பிரமாண்டமான சினிமா சூட்டிங்" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்! - MINISTER REGUPATHY

விஜய் பாஜகவின் C டீம் எனவும், நடந்து முடிந்ததை தவெக மாநாடு என்பதைவிட பிரமாண்டமான சினிமா சூட்டிங் என்றே சொல்லலாம் எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Vijay TVK Conference  அமைச்சர் ரகுபதி  tvk maanadu  தவெக மாநாடு
அமைச்சர் ரகுபதி, விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 12:32 PM IST

புதுக்கோட்டை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நேற்று விஜயின் தவெக மாநாடு நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், கோயில் குடமுழுக்கு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, "தனது கட்சியை ஏ (A) டீம், பி (B) டீம் என்று சொல்வார்கள் என நடிகர் விஜய் கூறினாலும், அவர் பாஜகவில் A டீமும் இல்லை, B டீமும் இல்லை C டீம். திராவிட மாடலின் ஆட்சியை மக்கள் மத்தியிலிருந்து அகற்ற முடியாது என்பதை நேற்று நடிகர் விஜய் வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

தவெக மாநாடு பிரம்மாண்ட சினிமா சூட்டிங்: மாநாட்டில் எங்களது கொள்கைகளுக்கு அவர்கள் விளக்கம் மட்டுமே கொடுத்துள்ளனர். மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்லும் கொள்கைகளை தமிழக மக்கள் மத்தியிலிருந்து யாரும் பிரித்து விட முடியாது. நேற்று நடைபெற்றது மாநாடு என்பதைவிட பிரமாண்டமான சினிமா சூட்டிங் என்றே சொல்லலாம்.

அமைச்சர் ரகுபதி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தேர்தலில் வெற்றி பெற்று அவர்கள் ஆட்சிக்கு வரட்டும். அதன் பின்பு கூட்டணியில் பங்கு கொடுப்பது பற்றிப் பார்க்கலாம். அதிமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது தெரிந்து தான் அவர்களைப் பற்றிப் பேசவில்லை. அதிமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்ப்பதற்காகத்தான் விஜய் அவர்கள் குறித்து எதுவும் பேசவில்லை.

இதையும் படிங்க: 2026-ல் த.வெ.க. சின்னம் என்ன? விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள்

ஊழலைப் பற்றி பேச வேண்டுமெனில் 2011 - 2021 வரையிலான ஆட்சியில் நடந்த ஊழலைப் பற்றி தான் பேச வேண்டும். 2021- 2026-இல் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை. யாராலும் பேச முடியாது, ஏனென்றால் நாங்கள் எந்த ஒரு தவறுக்கும் இடம் கொடுக்கவில்லை. பழுத்த மரத்தில் தான் கல்லடி படும். அந்த வகையில், திமுகவை தாக்கி பேசினால் தான் மக்கள் மத்தியில் ஏதாவது சென்று பேச முடியும் அதனால் பேசுகின்றனர்.

திமுக இளைஞரணி மாநாட்டுக்கு வந்தவர்கள் முழுக்க முழுக்க இளைஞர்கள் தான். 1,500 மீட்டர் 1,000 அடி நீளம் என்ற அளவில் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பந்தல் அமைத்திருந்தோம். விஜயின் மாநாட்டுக் கூட்டத்தை விட 3 மடங்கு கூட்டத்தை நாங்கள் கூட்டி இருந்தோம். இளைஞர்கள் நம்பி வரும் இயக்கமாக திமுக தான் உள்ளது. தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் கூட்டத்தை காட்டுவதற்காக இந்த மாநாட்டு ஷோவை நடத்தியுள்ளனர்.

கொள்கைக்காக ஆட்சி இழந்த கட்சி: திராவிடம் என்பது தமிழ் மண்ணிலிருந்து அகற்ற முடியாத ஒரு சொல், அந்த சொல் முதலில் வரும் போது அதன் பின்பு எந்த சொல் வந்தாலும் பிரச்சனை இல்லை. நாங்களும் தமிழ்நாடு என்று தான் சொல்கிறோம். திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை. சிறுபான்மையின் நலனுக்கு இந்தியாவிலேயே பல்வேறு வகையில் அதிகமாக பாடுபட்டுப் பாதுகாக்கும் இயக்கம் திமுக தான். அதனால் என்னென்ன பாதிப்புகளை சந்தித்துள்ளோம் என்பது நாடறியும். ஒரு முறைக்கு இருமுறை கொள்கைக்காக ஆட்சி இழந்த கட்சி திமுக" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.