ETV Bharat / state

விழுப்புரம் பிரச்சாரத்தில் பானை சின்னம் பாடலுக்கு நடனமாடிய அமைச்சர் பொன்முடி! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Minister Ponmudy Dance for Election Campaign: தேர்தல் பிரச்சாரத்தின் போது இசைக்கப்பட்ட பானை சின்னம் பாடலுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நடனமாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Minister Ponmudy dance
Minister Ponmudy dance
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 10:38 AM IST

Updated : Apr 10, 2024, 12:25 PM IST

விழுப்புரம் பிரச்சாரத்தில் பானை சின்னம் பாடலுக்கு நடனமாடிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது, இந்த நிலையில் தேர்தல் கள பிரச்சாரங்கள் சூடுபிடித்துக் காணப்படுகிறது. இந்த நிலையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமாரை ஆதரித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரங்கியூர், ஏனாதிமங்கலம், சிறுவானூர், சிறுமதுரை, ஏம்ப்பூர், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர், சின்னசெவலை, டி.எடையார் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அவரது சொந்த ஊரான டி.எடையார் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, "ஒரு காலத்தில் பெண்கள் படிக்க நினைத்தாலும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இன்று நீங்கள் படிக்காவிட்டாலும் உங்கள் குழந்தைகளைப் படிக்க வேண்டும் என கண்டித்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கு காரணம் திராவிடம்.

ஏனெனில் பெண்கள் படிக்க வேண்டும் என்பதைத்தான் பெரியாரும், அண்ணாவும் திரும்பத் திரும்ப இந்த சமூகத்திற்குக் கூறினார்கள். சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம். பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோயிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம். ஆனால் எல்லோரும் சமம் என்பதை ஏற்காத பாஜகவோடு பாமக கூட்டணி அமைத்துள்ளது.

பாஜக சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி. அதனால் தான் மோடி யாரும் வளரக்கூடாது என எண்ணுகிறார். குறிப்பாக தமிழர்கள் நாம் முன்னேறுவது அவருக்கு விருப்பமில்லை. எனவே சென்ற முறை எனக்கு உதயசூரியனில் வாக்களித்தது போல, இந்த முறை என் சகோதரர் ரவிக்குமாருக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள்" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரச்சார வாகனத்தில் "என்னா சின்னம் பானை சின்னம்...நம்ம சின்னம் பானை சின்னம்" என்ற பானை சின்னத்தின் பாடல் இசைக்கப்பட்டது. அப்போது குஷியான அமைச்சர் பொன்முடி நடமாடியவாறு சென்றார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: சென்னையில் பிரதமர் ரோடு ஷோ.. வேட்டி சட்டையில் வந்த மோடி! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 10, 2024, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.