திண்டுக்கல்: பழனியில் ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடைபெற உலக முருக பக்தர்கள் மாநாட்டின் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார். பின் ரோப்கார் மூலம் மலைக்கோயிலுள்ள தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளையும்,,பிற பணிகளையும் அமைச்சரும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், செயலர் மணிவாசகம் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், உலகம் முழுவதும் இருந்து முருக பக்தர்களும் பங்கேற்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.