ETV Bharat / state

தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் தோற்றால் பதவியை ராஜினாமா செய்வேன் - அமைச்சர் பி.மூர்த்தி சபதம்! - Minister Moorthy - MINISTER MOORTHY

Minister Moorthy: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெற முடியாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன் தோற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 10:45 PM IST

Updated : Mar 26, 2024, 10:28 AM IST

மதுரை: அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அறிமுக கூட்டம் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, “தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காகக் கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றி வாகை சூட வேண்டும்.

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெற முடியாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என ஆவேசமாகப் பேசினார். மேலும் உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும், கட்சிக்குச் சிலர் துரோகம் செய்து வருகின்றனர்.

சோழவந்தான் தொகுதியில் நான் உழைத்ததால் தான் தற்போது அமைச்சராகப் பதவி உயர்ந்துள்ளேன். எனவே கட்சியினர் துரோகம் செய்யாமல் உண்மையாக வேட்பாளர்களுக்கு உழைத்து வெற்றிக்குப் பாடுபட வேண்டும்” என்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ராணு வீரர் கைது.. மதுரை பகீர் சம்பவம்! - Army Man Arrested

Last Updated : Mar 26, 2024, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.