ETV Bharat / state

காலையில் காகிதம் பொறுக்கியவர்..மாலையில் ஊழியர்... அமைச்சர் மா.சு. செய்த நெகிழ்ச்சி சம்பவம்! - Minister Ma Subramanian

Minister Ma.Subramanian: கிண்டியில் காகிதம் எடுத்து பிழைத்த திருச்சியைச் சேர்ந்த ராஜா தன்னுடைய நிலைமையை,அவ்வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் தெரிவித்ததால், அமைச்சர் அவருக்கு தற்காலிகமாக மருத்துவமனை பணியாளர் பணியை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 5:28 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Credits - ma subramanian X Page)

சென்னை: சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள வீட்டிலிருந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் தெரு ஓரம் காகிதம் எடுத்து பிழைப்பவர் அமைச்சரைப் பார்த்து வணக்கம் தெரிவித்துள்ளார்.

உடனே அவரை அழைத்து அமைச்சர் விசாரித்தபோது, அவர் தான் கஷ்டப்படும் நிலைமையை கூறி உள்ளார். அதன்பின் அமைச்சர் தன்னுடைய வாகனத்திலே கிண்டி லேபர் காலனியில் உள்ள இல்லத்திற்கு அழைத்துச் சென்று குளிக்கச் சொல்லி, உடை மற்றும் உணவு வழங்கி உள்ளார்.

மேலும், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் அவர் நன்றாக இருக்கிறார் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் மருத்துவமனை பணியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது. பேப்பர் எடுத்து வாழ்க்கை நடத்தியவரின் வாழ்க்கையை சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மாற்றி அமைத்துக் கொடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: "உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தால் காங்கிரஸ் வரவேற்கும்" - செல்வப்பெருந்தகை! - Selvaperunthagai ABOUT DPCM POST

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.