ETV Bharat / state

“ஒரு வாரத்திற்குள் 26 மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்கள் நியமிக்கப்படுவர்”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்! - Ma Subramanian on food safety

Ma Subramanian on Medical College principal: தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது, அதில் சில கல்லூரிகளில் பொறுப்பு முதல்வர்கள் உள்ளார்கள், இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் 26 மருத்துவக் கல்லூரிகளுக்கும் முதல்வர் நியமிக்கப்படுவர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு பணி நியமன ஆணை வழங்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு பணி நியமன ஆணை வழங்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 9:49 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 127 உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, தமிழ்நாடு பன்னோக்கு மருத்துவமனையில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அமைச்சர், “தமிழ்நாடு அளவில் உணவு பாதுகாப்பு அலுவலர்களின் ஒட்டுமொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 391. இதில் ஏற்கெனவே 235 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இருக்கும் 127 பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துறையின் நடவடிக்கைகளான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்பாடுகள் கடந்த 3 ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. ‘உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம்' என்ற திட்டத்தில் நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவினை தன்னார்வலர்களிடம் அளித்து உணவு தேவையுள்ளோருக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டம் உணவு பாதுகாப்பு துறைக்கு பல பரிசுகளை தேடித் தந்துள்ளது. இது போன்ற திட்டங்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி, உணவுப் பொருட்களை பாக்கெட்டுகளில் இருக்கின்ற முத்திரைகளில் சரியான தகவல்கள் இல்லாமல் இருந்தால் நடவடிக்கைகள் எடுப்பது போன்ற பணிகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

மருத்துவப் பணியாளர்களின் பணியிடங்கள் நிரப்பும் பணி வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருகிறது. 1,947 உதவி மருத்துவர்கள், 1,291 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், 946 மருந்தாளுநர் பணியாளர்கள், 977 தற்காலிக செவிலியர்களை நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள், சுகாதார அலுவலர்கள் என மொத்தம் 1,583 பணியிடங்கள் என 6,744 பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது.

மேலும் 2,553 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம சுகாதார செவிலியர்களைப் பொறுத்தவரை, 2,250 பேர் நிரப்பிட நீதிமன்ற வழக்குகள் இருக்கும் காரணத்தினால் சற்று காலதாமதம் ஆகின்றது. சுகாதார அலுவலர்கள் 1,066 பணியிடங்கள் நிரப்புவதற்கு ஏதுவாக 38 வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் காரணத்தினால், அப்பணிகள் வழங்குவதற்கு காலதாமதமாகிறது. ஆகவே, இந்தப் பணியிடங்களை விரைந்து நியமிப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்கள் உள்ளனர். சில இடங்களில் பொறுப்பு முதல்வர்கள் உள்ளனர். 26 முதல்வர்களுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு நியமிக்கப்படுவர். உணவங்களை ஆய்வு நடத்துவதில் பாகுபாடு இல்லை. அனைத்து தரப்பு உணவங்களிலும் ஆய்வு நடத்தப்படும்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1,000 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டது. அதுவும் நட்சத்திர விடுதிகளுக்குச் செல்வதற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அதனை எங்கு அனுப்புவதற்கு கொண்டு வரபட்டது என்பது தெரியவில்லை. பதப்படுத்தப்பட்ட கறிகளை ஒரு மாதம் வரையில் உண்ணலாம் எனக் கூறுகின்றனர். ஆனால், இது குறித்து உணவகத்தினரும் மனசாட்சியோடு நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “200 ஆண்டுகள் முன் சாதியப் பாகுபாடு இல்லையா?” பழனியில் கிடைத்த கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணம் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.