ETV Bharat / state

நகராட்சி, மாநகராட்சி தரம் உயர்த்துதல் தொடர்பாக 2 நாட்களில் புதிய சட்டத்திருத்தம்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி! - TN ASSEMBLY SESSION 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 2:30 PM IST

TamilNadu Municipality Upgrade: நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளை தரம் உயர்த்துவதற்கான புதிய சட்டத்திருத்தம் 2 நாட்களில் பேரவையில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

MINISTER KN NEHRU
அமைச்சர் கே.என்.நேரு (credit - Etv Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பதில் அளித்தார்.

அப்போது, "தளி தொகுதி தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு, புதிய அரசு அலுவலக கட்டிடம் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் என்றார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேரவையில் இரண்டு நாட்களில் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளை தரம் உயர்த்துவதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. தேவையான இடங்களை இச்சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தரம் உயர்த்துவதற்க்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதே போல், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாயகம் கவி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "திரு.வி.க நகர் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி 70 வது வார்டு இஎஸ்ஐ-ஏ (Esi -A) குடியிருப்பு பகுதியில் மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குறைந்த மின்னழுத்தம் கொண்ட மின்மாற்றிகள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 388 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்க்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 330 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 246 பணிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு துணை மின் நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு 60 சதவீத நிதியையும், மாநில அரசு 40 சதவீத நிதியையும் ஒதுக்கிட வேண்டும்.

அந்த வகையில் 202 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்காக 2,300 கோடி நிதி பெற்று பணிகள் மேற்க்கொள்வதற்க்கான் பரிசீலனை மத்திய அரசிடம் உள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் விரைவில் பணிகள் துவங்கப்படும். அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம், திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு - Hosur international airport

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.